கோஷ்டி சண்டையில் சிக்கிய தமிழக காங்கிரஸ் - 'இது வேறயா' என அலுப்படைந்த காங்கிரஸ் தொண்டர்கள்

தமிழக காங்கிரஸில் எப்பொழுதும் சண்டைக்கு பஞ்சம் இருக்காது இந்நிலையில்

Update: 2022-11-20 13:49 GMT

சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தொண்டர்கள் அடித்துக் கொண்டபின் தற்பொழுது காங்கிரஸ் அணி இரண்டாக பிரிந்துள்ளது.

தமிழக காங்கிரஸில் எப்பொழுதும் சண்டைக்கு பஞ்சம் இருக்காது இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி சத்தியமூர்த்தி பவனில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளர்களுக்கும், ரூபி மனோகரன் ஆதரவாளர்களுக்கும் ஏற்பட்ட தாக்குதலில் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு பலத்த காயம் அடைந்தனர்.

இந்த நிலையில் நவம்பர் 19ஆம் தேதி மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் இந்திரா காந்தியின் 15 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னை வால்டாக்ஸ் சாலையில் அமைந்துள்ள இந்திரா காந்தியின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு அழகிரி கிளம்பியதும் காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், இ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்க பாலு, கிருஷ்ணசாமி ஆகியோர் கூட்டாக வந்த இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் சத்தியமூர்த்தி பகுதியில் 'இந்தியாவின் வளர்ச்சியில் இந்திரா காந்தியின் பங்கு' என்ற தலைப்பில் கே.எஸ்.அழகிரி தலைமையில் கருத்தரங்கம் நடந்தது.

இந்த கருத்தரங்கில் செல்வப் பெருந்தகை குழுவினர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுகுறித்து காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வ பெருந்தகை கூறியதாவது, 'உட்கட்சி பூசல்கள் எதுவும் கிடையாது, நாட்டுக்கு சுதந்திரம் பெற்று தந்த வரலாற்று சிறப்புமிக்க கட்சி இது. இந்த கட்சியில் ரௌடிகள் கிடையாது' என கூறினார்.

மேலும் இது குறித்து காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது, 'கே.எஸ்.அழகிரிக்கு எதிராக செல்வப் பெருந்தகை தலைமையில் ஒரு புதிய அணி உருவாகி உள்ளது. இந்த அணிக்கு கே.எஸ்.அழகிரியின் தலைமை பிடிக்கவில்லை, இதை மறைப்பதற்காக அழகிரி தனது ஆதரவாளர்களிடம் கூறி 200க்கும் மேற்பட்டவர்களை அழைத்து வந்து தனியாக கூட்டம் கூட்டியிருக்கிறார்.

இவ்வளவு நாளாக வெளியில் தெரியாமல் இருந்த பிரச்சனை தற்பொழுது வெளியில் தெரியும் அளவுக்கு வந்து விட்டது. தற்பொழுது செல்வப் பெருந்தலை ஆதரவாளர்கள் கே எஸ் அழகிரி தலைமையை ஏற்க மறுக்கின்றனர் என கூறினார் சலசலப்புக்கு பஞ்சம் இல்லாத சத்தியமூர்த்தி பவனில் அடிதடி தொடர்ந்து கோஷ்டி பூஷன் உருவாகி இருப்பது தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


Source - Junior Vikatan

Similar News