ஐபேக் கொடுத்த ரிப்போர்ட்.. 20 சீட்டாக குறைத்த திமுக.. அதிர்ச்சியில் காங்கிரஸ்.!

ஐபேக் கொடுத்த ரிப்போர்ட்.. 20 சீட்டாக குறைத்த திமுக.. அதிர்ச்சியில் காங்கிரஸ்.!

Update: 2020-11-13 18:41 GMT

பீகார் சட்டசபை தேர்தலில், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டது. 142 தொகுதிகளில் போட்டியிட்ட ராஷ்ட்ரீய ஜனதா தளம் 75 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 25 சதவீத வெற்றியை கூட காங்கிரஸ் தாண்டாத காரணத்தால், ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியால், ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதே போன்ற நிலை தமிழகத்தில் நடக்கவிருக்கும் 2021 சட்டமன்ற தேர்தலிலும் நடைபெறலாம் என்று திமுக தலைமை அஞ்சுகிறது. 
கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக 173 தொகுதிகளில் போட்டியிட்டு 89 தொகுதிகளில் வெற்றி பெற்று 50 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களை பிடித்தது.

ஆனால் காங்கிரஸ் கட்சியோ 41 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 8 தொகுதிகளை பிடித்தது. இது 25 சதவீதத்திற்கும் குறைவான வெற்றியைதான் கைப்பற்ற முடிந்தது. காங்கிரஸ் தோல்விக்கு முக்கிய காரணம் தலைவர்களிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டதே என்று தெரியவந்தது.

தலைவர்களுக்கு வேண்டப்பட்ட நபர்களுக்கு சீட் கொடுத்தாக வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினர். தொகுதிக்கு அறிமுகம் இல்லாதவர்களுக்கு கூட காங்கிரஸ் கட்சி சீட் கொடுத்தது, இதனால்தான் தமிழக சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது.

இதனால் திமுக குறைந்த ஓட்டு சதவீதத்தில் ஆட்சியை இழந்தது அனைவருக்கும் தெரியும். எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் 40 தொகுதிகளை காங்கிரஸ் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றது.

ஆனால் திமுக, தற்போது பீகார் தேர்தல் முடிவை பார்த்து வெறும் 20 தொகுதிகள் ஒதுக்க முன்வந்துள்ளது. அதிக தொகுதிகளை கேட்டு முரண்டு பிடித்தால் கூட்டணியில் இருந்து புரளியை பிடித்து தள்ளிவிடவும் திமுக தயாராக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு ஐபேக் நிறுவனம் அளித்த ரிப்போர்ட்டும் கூட என்று சொல்லப்படுகிறது.

Similar News