ஸ்டாலினுக்கு இடையூறு செய்யவே ஆர். என். ரவி ஆளுநராக நியமனம் - அலறலை துவங்கிய கே.எஸ்.அழகிரி !
Breaking News.
"தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இடையூறு செய்யும் வகையிலேயே ஆ.ர் என் ரவியை ஆளுநராக நியமித்திருக்கிறது" என இப்பொழுதே அலறலை துவங்கிவிட்டார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி.
காவல்துறை பின்புலம் கொண்ட ஆர்.என் ரவியை நாகலாந்து ஆளுநராக மத்திய அரசு நியமித்தது. இது தொடர்பாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி கருத்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்றதாவது, "ரவீந்திர நாராயண ரவி என்கிற ஆர்.என் ரவியை தமிழக ஆளுநராக மத்திய அரசு நியமித்துள்ளது. பாட்னா வைச் சேர்ந்த இவர் 1976ஆம் ஆண்டு கேரள மாநில ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். அதன் பிறகு 2012ஆம் ஆண்டு புலனாய்வு பணியகத்தின் சிறப்பு இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றார். 2014 ஆம் ஆண்டு முதல் கூட்டு புலனாய்வுக் குழுவின் தலைவராகவும், 2018 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் பணியாற்றினார். முழுக்க முழுக்க காவல்துறை பின்புலம் கொண்ட அவரை நாகலாந்து ஆளுநராக மத்திய அரசு நியமித்தது. இந்நிலையில் அவர் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதில் உள்நோக்கம் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
விளம்பரமே கூடாது என்று சொல்லப்படும் நேர்மையான ஆட்சியை தந்துகொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு இடையூறு செய்யும் வகையிலேயே ஆ.ர் என் ரவியை ஆளுநராக மோடி அரசு நியமித்திருக்கிறது என்று நான் சந்தேகப்படுகிறேன்.
சிறந்த கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், அறிஞர் பெருமக்கள் ஆகியோரை ஆளுநராக நியமிப்பது தான் சிறந்த மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவற்றுக்கு முற்றிலும் புறம்பாக பயங்கரவாத குழுக்களை ஒடுக்குவதற்காக பொறுப்புகள் வழங்கப்பட்டு செயல்பட்டவர் ஆர்.எஸ் ரவி, இத்தகைய பின்னணி கொண்ட ஆர்.என் ரவியை புதிய ஆளுநராக தமிழகத்தில் நியமித்து ஜனநாயக படுகொலை நடத்துவதற்கு ஆயத்தமாக மோடி அரசு முயன்றால் அதனை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள அனைத்து கட்சிகளும், அமைப்புகளும், மக்களை திரட்டி போராட வேண்டிய சூழல் உருவாகும் என எச்சரிக்க விரும்புகிறேன்" என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.