3 மாதத்தில் ரூ.40 ஆயிரம் கோடி கடன் ! தி.மு.க. அரசின் சாதனை என்று ஹெச்.ராஜா குற்றச்சாட்டு !

தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து 3 மாதத்தில் ரூ.40 ஆயிரம் கோடி கடன் வாங்கியதுதான் திமுக அரசின் சாதனை என்று பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2021-08-16 04:06 GMT

தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து 3 மாதத்தில் ரூ.40 ஆயிரம் கோடி கடன் வாங்கியதுதான் திமுக அரசின் சாதனை என்று பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் தேசியக்கொடி ஏற்றினார்.

இதனை தொடர்ந்து அவர் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின்போது கொரோனா தொற்று காரணமாக கிராம சபைக் கூட்டம் நடத்த தடை செய்யப்பட்டது. அப்போது அதனை மீறி திமுக பல்வேறு இடங்களில் கிராமசபை கூட்டம் நடத்தியது.

தற்போது திமுக ஆட்சியில் கொரோனாவை காரணம் காட்டி கிராமசபை கூட்டம் நடத்த தடை என்கிறது. தமிழக அரசு வெளியிட்டுள்ள பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்துள்ள திட்டங்கள் தவிர புதிய திட்டங்கள் பெரிதாக எதுவும் இல்லை.

தேர்தல் அறிக்கையின்போது ரேஷன் அட்டைக்கு ரூ.1000 தருவதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது தகுதி உள்ளவர்கள் கண்டறிந்து வழங்கப்படும் என கூறியுள்ளனர். மேலும், திமுக ஆட்சி அமைந்த மூன்று மாதங்களில் ரூ.40 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளனர். இதுதான் அவர்களின் சாதனை என குற்றம்சாட்டினார்.

Source: Dinamalar

Image Courtesy: Dinamalar

https://www.dinamalar.com/news_detail.asp?id=2824364

Tags:    

Similar News