ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வுக்கே திருப்பதியில் மரியாதை இல்லை! கண்கலங்கிய ரோஜா!

ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வுக்கே திருப்பதியில் மரியாதை இல்லை! கண்கலங்கிய ரோஜா!

Update: 2021-01-19 17:18 GMT

திருப்பதியில் விஐபி சென்றால் அவர்களுக்கு சிவப்பு கம்பளம் வரவேற்பு அளிப்பதை தேவஸ்தானம் வாடிக்கையாக வைத்துள்ளது. ஆனால் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவரும், நகரி தொகுதியின் எம்.எல்.ஏ.,வுமான நடிகை ரோஜாவுக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்று புகார் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம், திருப்பதியில் ஏழுமலையான் கோயில் அமைந்துள்ளது. அந்த கோயிலுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிவர். அப்படி இருக்கும் பட்சத்தில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜா திருப்பதிக்கு சென்றுள்ளார். அவருக்கு உரிய மரியாதையை தேவஸ்தானம் அளிக்கவில்லை என்று தெரிகிறது.

இது தொடர்பாக அவர் திருப்பதியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தன்னை திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாரிகள் புறக்கணிப்பது, தன்னுடைய பதவிக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை. அதே போன்று நான் எனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்வதற்கு சென்றாலும் உரிய மரியாதை அளிப்பதில்லை என கண்கலங்கியபடி பேசினார். அவரது பேட்டி ஆந்திரா மாநிலத்தில் தற்போது புயலை கிளப்பியுள்ளது.

ஆளும் கட்சியில் நடிகை ரோஜா உள்ளார். ஆனால் அவருக்கே உரிய மரியாதை கொடுக்காமல் இருப்பது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. ஆளும் கட்சி இப்படி ஒரு சங்கடத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News