ஊரக உள்ளாட்சி தேர்தல்: இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று துவங்கியது!
இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 9 மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 9) காலை 7 மணிக்கு துவங்கியது.
இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 9 மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 9) காலை 7 மணிக்கு துவங்கியது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த 6ம் தேதி முதற்கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
இதனையடுத்து இரண்டாம் கட்டமாக 60 மாவட்ட கவுன்சிலர், 621 ஒன்றிய கவுன்சிலர், 1,202 ஊராட்சி தலைவர், 7,453 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. அது மட்டுமின்றி 28 மாவட்டங்களில் காலியாக இருக்கும் 13 மாவட்ட கவுன்சிலர், 40 ஒன்றிய கவுன்சிலர் 86 ஊராட்சி மன்ற தலைவர், 279 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
Source: Dinamalar
Image Courtesy:Business Standard