ஊரக உள்ளாட்சித் தேர்தல் ! 4 நாட்களில் 20 ஆயிரத்து 74 வேட்பு மனுதாக்கல் !

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய 4 நாட்களில் 20 ஆயிரத்து 74 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Update: 2021-09-19 01:57 GMT

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய 4 நாட்களில் 20 ஆயிரத்து 74 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்து வந்தது. இதனை செப்டம்பர் 15ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை தொடர்ந்து 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 6, 9ம் தேதி என 2 கட்டங்களாக நடைபெற உள்ளது என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ம் தேதி முதல் தொடங்கிய நிலையில் இதுவரை சுமார் 20 ஆயிரத்து 74 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நேற்று மட்டும் 6532 நபர்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Polimer

Tags:    

Similar News