ஊரக உள்ளாட்சி தேர்தல் : வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்!
தமிழகத்தில் நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெறுகிறது.

மொத்தம் 9 மாவட்டங்களில் 140 மாவட்ட கவுன்சிலர் பதவியும், 74 ஊராட்சி ஒன்றியத்தில் 1381 கவுன்சிலர் பதவியும், 2901 கிராம ஊராட்சி தலைவர் பதவியும், 22,581 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இதற்காக முதல் கட்டமாக அக்டோபர் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 2வது கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 9ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 15ம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று 22ம் தேதி கடைசி நாளாகும். இதனால் இன்று வேட்புமனு தாக்கல் செய்பவர்கள் அதிகமானோர் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source, Image Courtesy: Daily Thanthi