நைட்டியுடன் கோயிலில் நுழைந்த தி.மு.க. பெண் கவுன்சிலர் - தடுத்த அர்ச்சகர் பணி நீக்கம்!
தி.மு.க. பெண் கவுன்சிலர் ஒருவர் நைட்டியுடன் கோயிலில் நுழைந்ததை தடுக்க முயன்ற அர்ச்சகர் ஒருபர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம், அம்மாபேட்டை கிருஷ்ணா நகரில் சீதா ராமசந்திர மூர்த்தி கோயில் உள்ளது. இக்கோயில் காலை 7 மணி முதல் 11:30 மணி வரையும், மாலை 5 முதல் 8 மணி வரை திறக்கப்பட்டிருக்கும். இக்கோயிலில் அர்ச்சகராக பணிபுரிபவர் கண்ணன் (32). இவர் கடந்த 27ம் தேதி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.
அந்த வீடியோவில் அவர் பேசியதாவது: நான் 23 ஆண்டுகளாக அர்ச்சகராக சேவை செய்து வருகிறேன். இதற்கிடையில் சேலம் மாநகராட்சி 40 வது வார்டு தி.மு.க. பெண் கவுண்சிலர் தன்னை பணி செய்ய விடாமல் தடுக்கிறார். அது மட்டுமின்றி அடியாட்களை வைத்து தன்னை மிரட்டியும் வருகிறார்.
தற்போது எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் உள்ளது. இதற்கு காரணம் தி.மு.க. கவுன்சிலர் மஞ்சுளாதான் என்று குறிப்பிட்டிருந்தார். அதாவது மஞ்சுளா நைட்டியுடன் கோயிலில் நுழைந்துள்ளார். அதனை அர்ச்சகர் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை மனதில் வைத்துக்கொண்ட கவுன்சிலர் மஞ்சுளா, தனது செல்வாக்கை பயன்படுத்தி அர்ச்சகரை உடனடியாக பணியில் இருந்து விடுவித்துள்ளார். இதனால் 23 ஆண்டுகளாக பணியில் இருந்த அர்ச்சகரை நீக்கிய சம்பவம் சேலம் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Source, Image Courtesy: One India Tamil