திருவாரூரில் உள்ள சசிகலா, இளவரசியின் 7 சொத்துகள் அரசுடைமை: திருவாரூர் ஆட்சியர் அதிரடி.!

திருவாரூரில் உள்ள சசிகலா, இளவரசியின் 7 சொத்துகள் அரசுடைமை: திருவாரூர் ஆட்சியர் அதிரடி.!;

Update: 2021-02-10 18:17 GMT

திருவாரூரில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் சொத்துகள் அரசுடைமை ஆக்கப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று தண்டனை காலம் முடிவடைந்த நிலையில், கடந்த 27ம் தேதி விடுதலை ஆனார்.

இதனையடுத்து கடந்த 8ம் தேதி தமிழகம் திரும்பிய சசிகலாவிற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி சம்பவம் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோரின் சொத்துக்கள் அரசுடைமை ஆக்கப்பட்டு வருகிறது. சென்னையில் 6 சொத்துக்களும், காஞ்சிபுரத்தில், 17 சொத்துக்களும் செங்கல்பட்டில் 6 சொத்துக்களும் அரசுடைமை ஆக்கப்பட்டன. 

இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 7 சொத்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த சம்பவம் மீண்டும் சசிகலா தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் திரும்பி 2 நாட்களில் 20க்கும் மேற்பட்ட சொத்துக்கள் அரசுடைமை ஆக்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
 

Similar News