ஜெயலலிதா இறப்பதற்கு முன் கொடநாடு செல்ல விரும்பினார்! சசிகலா சொன்ன புதிய தகவல்!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறப்பதற்கு முன்னதாக கொடநாடு எஸ்டேட்டுக்குச் செல்ல விரும்பியதாக ஜெயலலிதாவின் தோழி சசிகலா கூறியதாக நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது.

Update: 2021-10-01 09:50 GMT

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறப்பதற்கு முன்னதாக கொடநாடு எஸ்டேட்டுக்குச் செல்ல விரும்பியதாக ஜெயலலிதாவின் தோழி சசிகலா கூறியதாக நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக நமது எம்ஜிஆர் நாளிதழில் சசிகலா கூறியதாக வெளியிட்டுள்ள கட்டுரையில், இதய தெய்வம் அம்மா அவர்கள் குணமடைந்து வந்ததால், அப்போலோ மருத்துவனையில் இருந்து டிசம்பர் 19, 2016 அன்று போயஸ் கார்டன் வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்று எண்ணியிருந்தோம். ஆனால் நான் நேராக கொடநாடுதான் போவேன் என்று டாக்டர்களிடம் அம்மா அவர்கள் சொன்னார்கள்.

அப்போது அங்கு குளிராக இருக்கும். நாங்கள் உங்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய அங்கு வருவது கடினமாக இருக்கும். எனவே எங்களுக்காக ஒரு மாதமாவது சென்னையில் இருங்கும் அதன் பின்னர் கொடநாடு செல்லலாம் என்று டாக்டர்கள் சொன்னார்கள். அதற்கு 'இங்கே நான்தான் பாஸ்' என்று டாக்டர்களிடம் இதய தெய்வம் அம்மா அவர்கள் சொன்னார்கள்.'' இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நீதி விசாரணை நடைபெற்று வருகிறது. இன்றுவரை விசாரணை முடிந்த பாடில்லை. இதற்கு என்று ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை அமைக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: News 18

Tags:    

Similar News