சிறுபான்மையினரை விடுதலை செய்ய வலியுறுத்திய நாம் தமிழரை தாக்கிய தி.மு.கவினர்! சீமான் கடும் கண்டனம்!

தருமபுரி மாவட்டம், மொரப்பூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் திமுக அரசுக்கு எதிராகவும் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் மேடையில் பேசிக்கொண்டிருந்தவர்கள் மீது நாற்காலியை தூக்கி விசி, மைக்கை கீழே தள்ளி விட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-12-22 04:13 GMT

தருமபுரி மாவட்டம், மொரப்பூர் பேருந்து நிலையத்தில் நேற்று (டிசம்பர் 21) நாம் தமிழர் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரையும், மற்றும் 20 ஆண்டுகளாக சிறையில் உள்ள சிறுபான்மையினரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர் பேசும்போது, முன்னாள் திமுக தலைவரான கருணாநிதி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து பேசியுள்ளார். இதனால் அங்கு இருந்த திமுவினர் மேடையின் மேல் ஏறி மைக்கை கீழே தள்ளிவிட்டும், நாற்காலியை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதனால் ஆர்ப்பாட்டம் பாதியில் நின்றது. இந்த சம்பவத்தால் மொரப்பூர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மொரப்பூர் காவல் நிலையத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுகவினர் தாக்கிய வீடியோவை இணைத்து தனது ட்விட்டர் பக்கதில் பதிவிட்டுள்ளார். அதில் அதிகாரத்திமிரில் அரசியல் அநாகரீகத்தை அரங்கேற்றும் திமுகவினரின் செயல் வெட்கக்கேடானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: naamtamilar

Tags:    

Similar News