ரிசர்வ் வங்கி பியூனா இருந்த செல்வப்பெருந்தகை! இப்போது லண்டனில் கல்லூரி கட்டுமளவு சொத்து வந்தது எப்படி!

காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகைக்கு லண்டனில் கல்லூரி கட்டுமளவிற்கு பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

Update: 2021-08-25 05:28 GMT

காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகைக்கு லண்டனில் கல்லூரி கட்டுமளவிற்கு பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை குறித்து நியூஸ் ஜே செய்தி தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றி அந்த செய்தியில் கூறியிருப்பதாவது: செல்வப்பெருந்தகையின் வாழ்க்கை சரிதம் பச்சோந்திக்கு சமமானது. இவர் தனது அரசியல் பயணத்தை புரட்சித்பாரதம் கட்சியில் துவக்கினார். அக்கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியிடம் மன்றாடி ரிசர்வ் வங்கியில் பியூனாக வேலைக்கு சேர்ந்தார். இப்போதைய கோடிஸ்வரரான செல்வப்பெருந்தகை.

இதனிடையே ஆடிட்டர் பாண்டியன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். அந்த கொலையில் செல்வப்பெருந்தகையின் பெயர் அடிப்பட்டதால் அவரை கட்சியில் இருந்து பூஜை ஜெகன் மூர்த்தி நீக்கியுள்ளார்.

இதன் பின்னர் புதிய தமிழகம் கட்சியில் கிருஷ்ணசாமியிடம் அடைக்கலம் ஆனார். அங்கு சில நாட்களிலேயே செல்வப்பெருந்தகையின் சுயரூபம் தெரியவரவே அங்கிருந்து விடைக்கொடுக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து எஞ்சியிருந்த ஒரே ஒடுக்கப்பட்டவரின் கட்சியாக இருந்த விடுதலை சிறுத்தை கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அங்கு போன உடனேயே அவரின் ஆட்டம் அதிகமாகவே காணப்பட்டது. இதனால் 2001, 2006ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் செல்வப்பெருந்தகை மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

இதனையடுத்து கடந்த 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக ஸ்ரீபெரும்புதூரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் தலைமைக்கு துரோகம் செய்து தனியாக செயல்பட ஆரம்பித்ததை தொடர்ந்து அந்த கட்சியில் இருந்தும் வெளியேற்றப்பட்டார்.

வேறு வழியின்றி மாயாவதி நடத்தும் பகுஜன் சமாஜ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். கட்சியில் சேர்ந்த கொஞ்ச நாட்களிலேயே அவரது வண்டவாளங்கள் தண்டவாளம் ஏற, அங்கிருந்து அவருக்கு டாட்டா காண்பிக்கப்பட்டது.

கடைசி கட்சியான காங்கிரஸ் கட்சியில் வந்து சேர்ந்தார். இவர் 2014, 16ல் காங்கிரஸ் சார்பில் செங்கத்திலும், ஸ்ரீபெரும்புதூரிலும் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

இதன் பின்னர் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஸ்ரீபெரும்புதூரில் நின்று வெற்றி பெற்றார். தற்போது வரம்புக்கு மீறி சொத்துக்களை குவித்து லண்டனில் கல்லூரி ஒன்றை துவக்கியுள்ளாராம் செல்வப்பெருந்தகை.

இல்லை என்று மறுக்க முடியாத அளவிற்கு அந்த கல்லூரியின் இயக்குநர்களில் ஒருவராக அவரது மனைவி உமையாள் பெயர் இடம் பெற்றுள்ளதாம்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் ரிசர்வ் வங்கியின் பியூனாக இருந்த செல்வப்பெருந்தகைக்கு எப்படி லண்டனில் கல்லூரி கட்டுமளவிற்கு பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.

Source, Image Courtesy: News J

Tags:    

Similar News