தி.மு.க. எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!

செந்தில் பாலாஜி உட்பட 47 பேருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் புதியதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

Update: 2021-03-27 06:33 GMT

கடந்த அதிமுக அமைச்சரவையில் தற்போதைய திமுக எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவர் வேலை வாங்கி தருவதாக கூறி, சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்ததாக அவர் மீது புகார் வந்தது. இதனையடுத்து அவர் உட்பட 4 பேர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கப்பதிவு செய்யப்பட்டது.


 



இந்த வழக்கில் செந்தில் பாலாஜி உட்பட 47 பேருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் புதியதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது செந்தில் பாலாஜி கரூர் தொகுதியில் திமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிடுகிறார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மணல் திருடுவது பற்றி பேசி சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்க்கது.

Similar News