'உங்க கூட்டணில இருந்தா உங்களுக்கு ஜால்ரா அடிக்கணுமா?' - ஸ்டாலினுக்கு எதிராக குபீரென பொங்கிய வேல்முருகன்

'தி.மு.க அரசுக்கு கூட்டணி கட்சி என்ற காரணத்தினால் நான் 'ஜிங்க்சாங்' அடிக்க வேண்டுமா?' என தமிழர் வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தி.மு.க'விற்கு எதிராக கொதித்துள்ளார்.

Update: 2022-07-15 05:42 GMT

'தி.மு.க அரசுக்கு கூட்டணி கட்சி என்ற காரணத்தினால் நான் 'ஜிங்க்சாங்' அடிக்க வேண்டுமா?' என தமிழர் வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தி.மு.க'விற்கு எதிராக கொதித்துள்ளார்.

2021 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க'வுடன் கூட்டணி வைத்த தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பண்ருட்டி தொகுதியில் தி.மு.க'வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தி.மு.க'வின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் கடந்த ஜூலை 10ஆம் தேதி சேத்தியாத்தோப்பில் நடைபெற்ற கூட்டத்தில் வேல்முருகன் தி.மு.க அரசை கடுமையாக விமர்சித்து பேசி உள்ளது சலசலப்பு ஏற்படுத்தி உள்ளது.

அந்த கூட்டத்தில் பேசிய வேல்முருகன் கூறியதாவது, திராவிட மாடல் என்ற அத்தியாயத்திற்கு அடித்தளமிட்டு தி.மு.க'வை தூக்கி சுமந்தவர்கள் வன்னிய பேரினம் இல்லையா?' என கேள்வி எழுப்பினார். மேலும் அவர் கூறியதாவது, 'ஆனால் வன்னியர் இனத்தில் லாக்கப் மரணம் நிகழ்ந்தால் நிவாரணம் கிடையாது, கற்பழித்துக் கொன்றால் நிவாரணம் கிடையாது, கலெக்டர் பதவி கிடையாது, எஸ்.பி பதவி கிடையாது, வாரிய தலைவர் பதவி கிடையாது, மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர்களே இந்த ஜாதியை பிடிக்காத காழ்ப்புணர்ச்சி கொண்ட வெறிபிடித்த சாதி அதிகாரிகள் உங்களிடம் தவறான தகவல்களை கூறுகிறார்கள்' என்றார்.

மேலும் பேசிய அவர், 'முதல்வர் அவர்களை உங்களுடன் இருக்கும் ஒரு கூட்டம் சாதி பார்க்கிறது. எங்கோ பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் கொடுத்தீர்கள், ஆனால் இங்கு திட்டக்குடியில் என் உறவு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார் (ஆனால் கொல்லப்படவில்லை) ஆனால் இன்னும் ஒரு பைசா கொடுக்கவில்லை ஏன் இந்த பாரபட்சம்.

உங்கள் கூட்டணியில் இருக்கும் வேல்முருகன் நான் கேட்கிறேன் பதில் சொல்லுங்கள் சீட்டுக்காக, நோட்டுக்காக, பதவிக்காக என் கண் முன்னால் நடக்க அநியாயங்களை பொறுத்துக் கொண்டு பொத்திக்கொண்டு கூட்டணி கட்சிக்காக 'ஜிங்க்சாங்' அடிக்க மாட்டேன்.

தமிழ்நாட்டில் யார் எங்கு பாதிக்கப்பட்டாலும் நிவாரணம் அறிவிக்கும் முதல்வர் அவர்களே அந்த ஏழை வன்னிய பெண் செய்த தவறென்ன? சக பள்ளி மாணவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தற்போது உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அந்த பெண் குடும்பத்திற்கு 10 நாளாகியும் ஏன் நிவாரணம் அறிவிக்கப்படவில்லை நாதியற்ற இனமா நாங்கள்?


இரண்டு கோடி வன்னிய மக்களையும் நீங்கள் ஓரம் கட்டுவது எந்த விதத்தில் நியாயம்? தமிழ்நாட்டில் 38 மாவட்ட ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் ஒருவர் கூட வன்னியர் அதில் இல்லை' என பேசினார்.


Source - Junior Vikatan

Similar News