சிவராஜ் சிவகுமார் மறைவு சித்த மருத்துவத்துக்கு பேரிழப்பு: முதலமைச்சர் இரங்கல்.!

சிவராஜ் சிவகுமார் மறைவு சித்த மருத்துவத்துக்கு பேரிழப்பு: முதலமைச்சர் இரங்கல்.!;

Update: 2021-02-10 17:57 GMT

சேலம் சித்த மருத்துவர் சிவராஜ் சிவக்குமாரின் மறைவு சித்த மருத்துவத்துக்கு பேரிழப்பு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமானவர் சேலம் சித்த மருத்துவர் சிவராஜ் சிவகுமார், இவரது குடும்பம் கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு மேலாக சித்த வைத்தியம் பார்ப்பதில் கை தேர்ந்தவர்கள். அதிலும் ஆண்மைக்குறைவுக்கு என்று தனிக்கவனம் செலுத்தி வந்தவர் சிவராஜ் சிவகுமார். அதற்காக தனியார் தொலைக்காட்சியில் நேரடியாக தானே உரையாற்றி வந்தார். அந்த நிகழ்ச்சிகள் மூலம் இன்னும் பிரபலம் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சிவராஜ் சிவக்குமாருக்கு உடல் நலக்குறைவால் சிகிச்சை எடுத்து வந்த நிலையில், அவர் இன்று காலமானார். அவரது மறைவு செய்தியை கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். அவரது மறைவு பேரிழப்பு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கலையும், அனதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று தனது இரங்கல் செய்தியில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
 

Similar News