பட்டியலின ஜாதியை சொல்லி திட்டிய திமுக அமைச்சர் இலாகா மாற்றம்!

Update: 2022-03-30 02:37 GMT

போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் முதுகுளத்தூர் பிடிஓவை ஜாதியை சொல்லி திட்டியதாக பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், தற்போது பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அதிகாரி (பிடிஓ) அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். அதாவது தன்னை ஜாதி ரீதியில் சொல்லி திட்டினார். இது எனக்கு மிகப்பெரிய மனவேதனையை தந்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

இவரது பேட்டியை தொடர்ந்து பலர் வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு ஆதரவாக குரல்கள் எழுந்தது. இதனால் அரசுக்கு கெட்டப்பெயர் ஏற்பட்டுவிடுமோ என்ற எண்ணத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்ட நலத்துறைக்கு திடீரென்று மாற்றப்பட்டுள்ளார். இருந்தாலும் இவர் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று பலர் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News