இதுவரைக்கும் ட்ரைலர் தான், இனிதான் மெயின் பிக்சரே - அண்ணாமலை டெல்லி விஜயத்தின் ரகசியம்

பரபரப்பான அரசியல் சூழலில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றுள்ள விவகாரம் பெரும் எதிர்பார்ப்பையும், தகிக்கும் சூழலையும் ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-01-16 09:00 GMT

பரபரப்பான அரசியல் சூழலில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றுள்ள விவகாரம் பெரும் எதிர்பார்ப்பையும், தகிக்கும் சூழலையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசியல் சூழலில் தற்பொழுது பரபரப்பு நிலவி வருகிறது, குறிப்பாக தமிழக பா.ஜ.க'வில் அண்ணாமலை எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளும், களத்தில் இறங்கி அவர் செய்யும் அரசியலிலும் எதிர்க்கட்சிகள் மட்டும் இல்லாமல் கட்சிக்குள்ளே சில பூகம்பங்கள் வெடித்துள்ளன.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகள் களத்தில் அண்ணாமலை செய்யும் அரசியலை பொறாமையோடும், வாழ்நாள் பயத்தோடும் பார்க்கின்றன. ஏனெனில் மக்கள் பிரச்சினைகளை முதலில் பேசுகிறார்! களத்தில் அதிகம் பயணிக்கிறார்! அதிக மக்களை சந்திக்கிறார்! 'அறியப்படாத அதிசய மனிதர்கள்' என்ற பெயரில் நிறைய சமுதாயத் தொண்டு செய்து மக்களுக்காக வாழ்பவர்களை மக்கள் மத்தியில் பாராட்டி பிரபலப்படுத்துகிறார்.

இதெல்லாம் போதாது என சமூக வலைதளங்களிலும் இளைஞர்கள் மத்தியில் அண்ணாமலை புகழ் மற்ற தமிழக அரசியல்வாதிகளை விட ஒரு படி உயர்ந்தே உள்ளது. இன்றைய ஒரு படித்த இளைஞனை போய் இன்று உங்களை கவரும் அரசியல்வாதி யார்? யாருக்கு நீங்கள் ஆதரவு தெரிவிப்பீர்கள்? என கேட்டால் யோசிக்காமல் பளிச்சன அண்ணாமலை என கூறுவார். அந்த அளவிற்கு அண்ணாமலையின் தாக்கம் குறுகிய காலத்திலேயே தமிழக அரசியலில் வியாபித்துள்ளது.

இந்த நிலையில் இதுவரை தமிழக பா.ஜ.க இருந்த பரிமாணத்தில் இருந்து முற்றிலும் அடுத்த கட்ட பரிமாணத்திற்கு நகர்ந்துள்ளது. அதற்க்கு அண்ணாமலை அவர்களே தக்க பதிலளித்துள்ளார் சீன மூங்கில் வளர்ச்சியை உதாரணமாக வைத்து, அண்ணாமலை கூறியதாவது, சீனா ஒருவகை மூங்கிலை முதலில் 90 நாட்களுக்கு தண்ணீர் ஊற்றினால் அது அப்படியேதான் இருக்கும் பார்ப்பவர்களுக்கு வளர்வது போல் தெரியாது ஆனால் 90 நாட்கள் கழித்து அதன் வளர்ச்சி தினமும் 4 செ.மீ இருக்கும். அப்படித்தான் தமிழக பா.ஜ.க! முதலில் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், எல்.முருகன் போன்ற தலைவர்கள் இதற்க்கு நல்ல ஊட்டம் வரும் வகையில் தண்ணீர் ஊற்றிவிட்டனர், அதன் பலன் இப்பொழுது வளர்ச்சியில் தெரிகிறது என கூறியுள்ளார்.

குறிப்பாக தமிழக பா.ஜ.க தேர்தலுக்கு மட்டும் வேலை செய்யும் கட்சிகளுக்கு, மத்தியில் வருஷம் 365 நாளும் வேலை செய்யும் கட்சியாக இன்று மாறியுள்ளது என்றால் அதற்கு அண்ணாமலை மிக முக்கிய காரணம்.

இதன் காரணமாக களத்தில் மற்ற கட்சிகளின் மத்தியிலும், கட்சிக்குள் அண்ணாமலை எடுக்கும் நடவடிக்கைகளால் சிலர் பொறாமையில் வெம்பி வெடிக்கின்றனர். குறிப்பாக கட்சியிலிருந்து சமீபத்தில் வெளியே சென்ற சிலர் அண்ணாமலைக்கு எதிராக கருத்து தெரிவிப்பது, அண்ணாமலை தமிழக பா.ஜ.க'விற்கு துரோகம் இழைக்கிறார் என்பது போன்ற கருத்துக்களை கூறுவதும் பார்க்கையில் அண்ணாமலையின் வளர்ச்சி அப்பட்டமாக தெரிகிறது.

அண்ணாமலை பா.ஜ.க'விற்கு மாற்றத்தை ஏற்படுத்துவாரே தவிர அண்ணாமலை எப்படி பா.ஜ.க'விற்கு துரோகம் செய்வார் என்று சாதாரண தொண்டன் கூட நினைக்கும் நிலையில் அண்ணாமலை கட்சியை வளர விட மாட்டார் எனவும் கட்சியில் இருந்து வெளியில் சென்றவர்கள் கூறுவது மிகவும் வேடிக்கையாகவும் அதே சமயம் அவர்களை பார்க்கையில் வேதனையாகவும் இருக்கிறது. இத்தனை நாளாக இவர்களை வைத்துதான் பா.ஜ.க நடந்ததா? என!

இப்படிப்பட்ட சூழல் நிலவும் நிலையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார், தமிழக பா.ஜ.க வட்டாரத்தில் விசாரித்த பொழுது இது தேசிய அளவில் நடக்கும் முக்கியமான கூட்டத்திற்க்காக அண்ணாமலை சென்று உள்ளார் எனவும் இந்த சமயத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை அண்ணாமலை சந்திப்பார் என கூறுகின்றனர்.

இந்த 2023 ஆம் ஆண்டு அண்ணாமலை நிறைய திட்டங்கள் வைத்துள்ளதாகவும், குறிப்பாக ஏப்ரல் மாதம் முதல் நடை பயணம், கட்சியின் அமைப்பை இன்னும் பலப்படுத்துவது, கட்சியில் பூத் லெவல் ஆட்களை நியமிப்பதில் முழுவித வேலைப்பாடு என பல திட்டங்களை அண்ணாமலை வைத்துள்ளதாகவும் அதற்கான திட்டப்பணிகளுடன் அண்ணாமலை ஜே.பி நட்டாவை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட பாஜகவின் வளர்ச்சி ஐந்து மடங்கு முதல் 10 மடங்கு வரை அதிகமாக இருக்கும் என தமிழக பா.ஜ.க'வினர் ஆணித்தரமாக கூறுகின்றனர், காரணம் அடுத்த 2024 இல் நடக்கப் போகும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இந்த ஆண்டுதான் சரியான காலம் எனவும் இந்த ஆண்டு செய்யும் வேலைகளின் முடிவு தான் அடுத்த ஆண்டு தேர்தலில் பிரதிபலிக்கும் எனவும் தமிழக பா.ஜ.க நம்புகிறதோ இல்லையோ அண்ணாமலை கடினமாக நம்புகிறார். இதன் காரணமாகவே வருடம் 365 நாட்களும், வாரத்தில் 7 நாட்களும், தினமும் 24 மணி நேரமும் என ஒரு நிமிடத்தை கூட வீணடிக்க கூடாது என்பதில் அண்ணாமலை உறுதியாகவும் உள்ளார்.

இது ஒரு புறம் இருக்கையில் மறுபுறம் எதிர்க்கட்சிகளோ தமிழக பா.ஜ.க இது போல் வளர்ந்து வருவது தங்களுக்கு ஆபத்து என சிறிய கட்சிகள் முதல் பெரிய கட்சிகள் வரை பதறுகின்றனர். குறிப்பாக தி.மு.க'வின் கூட்டணி கட்சிகள்! பா.ஜ.க வளர்ந்தால் தாங்கள் அரசியல் செய்ய முடியாமல் போகும் என தி.மு.க பதறுகிறது, தங்களின் ஊழல் மற்றும் மக்களிடையே மறைக்கப்படவேண்டிய வேண்டிய விஷயங்கள் போன்றவற்றை மக்களிடையே அண்ணாமலை கூறி வருவதும் தி.மு.க'வினரை தூங்கவிடாமல் செய்கிறது. திமுகவின் கூட்டணி கூட்டணிக் கட்சிகளோ 'ஏதோ இத்தனைநாள் வரை அரசியல் செய்து தி.மு.க'விடம் ஒட்டிக்கொண்டு அவர்கள் சொல்லும் போராட்டத்தை செய்துகொண்டு இறுதியில் அவர்களின் சின்னத்திலே நின்று ஒரு சீட்டு, இரண்டு சீட்டு என வாங்கிக்கொண்டு கட்சியை நடத்திக் கொண்டு வருகிறோம்! இந்த நிலையில் பா.ஜ.க இப்படி விஸ்வரூபமாக இறங்குவது தங்கள் அரசியல் வாழ்க்கையை பாழ்படுத்தும் எனவும் ஆணித்தனமாக நம்புகின்றனர் தி.மு.க'வின் கூட்டணி கட்சிகள்.

இத்தனைநாள் வரை தமிழக அரசியலை தனிநபரை மையப்படுத்தி இருந்தது, தற்பொழுது தமிழக அரசியல் களம் கருத்துக்களை மையப்படுத்திருப்பது தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகளை அச்சமடைய செய்துள்ளது ஏனெனில் தங்களுக்கு கருத்து, கொள்கை என வந்துவிட்டால் அது தேர்தல் வரும் பொழுது மாறும் இப்படி கருத்தை மையமாக வைத்து அரசியல் செய்தால் பின் நாங்கள் எப்படி பிழைப்பது? என திமுக கூட்டணி கட்சிகள் கதறல் இப்பொழுதே கேட்கின்றது! இந்த சூழலில் அண்ணாமலையின் இந்த டெல்லி விஜயம் முக்கியமாக பார்க்கப்படுகிறது, டெல்லி சென்று திரும்பியவுடன் அண்ணாமலை எடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் எடுத்து வைக்கும் அடிகள் அத்தனையும் அதிரடியாகவும் இருக்கும் என தெரிகிறது.

Similar News