'இளையராஜா, கங்கை அமரன் சகோதரர்களை யாரோ இயக்குகிறார்கள்' - பதறும் திருமாவளவன்
இளையராஜா, கங்கை அமரன் ஆகியோரை சங் பரிவார் கும்பல் இயக்குகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.
இளையராஜா, கங்கை அமரன் ஆகியோரை சங் பரிவார் கும்பல் இயக்குகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் பேரவையின் சார்பில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கான ஓய்வு ஊதியம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வி.சி.க தலைவரும், எம்.பி'யுமான திருமாவளவன் கலந்து கொண்டார்.
அப்பொழுது அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது, 'கங்கை அமரன் எங்களை விமர்சிக்கவில்லை. கேள்வி எழுப்பியிருக்கிறார் திருமாவளவனை ஒப்பிடலாமா? முதல்வரை ஒப்பிடலாமா? என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருக்கிறார். அவருக்கு யாரோ சொல்லித் தந்திருக்கிறார்கள்' என்றார்.
சங்கிகள் அல்லது சங்பரிவார் அமைப்புகளைச் சார்ந்தவர்கள், அதாவது கொள்கை அடிப்படையில் ஒருமித்த கருத்து உள்ளவர்களை ஒப்பிடுவது தவறு இல்லை அம்பேத்கர் யாருடனும் ஒப்பிட கூடாது என்று நாம் சொல்லவில்லை யாரோடு ஒப்பிடுவதில் தவறு இல்லை.
ஆனால் மோடி அவர்களின் அரசியல் வேறு, அம்பேத்கார் அரசியலுக்கு நேரெதிரானது. மோடி சங்பரிவார்கள் கும்பலில் உள்ள ஒரு தலைவர், அவர் பிரதமராக இருந்தாலும் கூட அவரின் கொள்கை, நிலைப்பாடு, செயல்பாடு எல்லாமே சமத்துவத்திற்கு எதிரான சமூக நீதிக்கு எதிரானது. ஜனநாயகத்துக்கு எதிரான நிலையை மக்களுக்கு எதிராகவே சாதியை காப்பாற்றக் கூடியவை. இது இசைஞானிக்கு தெரியாது, அவருடன் உடன்பிறப்புக்கும் தெரியாது யாரோ அவர்களே இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்' என்றார்.