முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வங்கி கணக்கு முடக்கம் !

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2021-08-12 07:41 GMT

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது சகோதரர் அன்பரசன் உட்பட பங்குதாரர்கள் 10 நிறுவனங்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 60 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இது திமுக அரசின் பழிவாங்கும் செயல் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.

அதே போன்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசனும் தனது கண்டனத்தை பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், வங்கிக் கணக்குகள் தொடர்பான பரிவர்த்தனை ஆவணங்களை ஏற்கனவே பறிமுதல் செய்திருப்பதாக தெரிவித்துள்ள லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார், ஏற்கனவே 2 கோடி வைப்பு நிதி தொடர்பாகன ஆவணம் ஒன்றை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில் 2 கோடி வைப்பு நிதி உள்ள அந்த வங்கி கணக்கை முடக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Source: Polimer

Image Courtesy: The new Indian Express

https://www.polimernews.com/dnews/152725/முன்னாள்-அமைச்சர்-எஸ்பிவேலுமணியின்-வங்கி-கணக்குமுடக்கம்

Tags:    

Similar News