சாப்பாடு, தண்ணீர் கிடைக்காததால் ஆத்திரம்: வாக்கு எண்ணும் மையத்தில் ஊழியர்கள் போராட்டம்!
உணவுப் பொருட்கள் தங்கள் இருக்கும் இடத்திற்கே வந்துவிடும் என்று ஊழியர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் வெகுநேரமாகியும் சாப்பாடு, குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லாமல் அவதியுற்று வந்ததாக ஊழியர்கள் குற்றம்சாட்டினர்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு இரண்டு கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் வாக்கு எண்ணும் பணிகள் மாங்காடு பிரதான சாலையில் உள்ள முத்துக்குமரன் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணும் பணிக்கு வந்திருந்த ஊழியர்கள், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து அதிகாலையிலேயே வந்துள்ளனர். ஆனால் ஊழியர்கள் தாங்கள் வீட்டில் இருந்து எடுத்து வந்த உணவுப்பொருட்களை கூட போலீசார் அனுமதிக்காமல் வெளியில் வைத்துள்ளனர்.
மேலும், உணவுப் பொருட்கள் தங்கள் இருக்கும் இடத்திற்கே வந்துவிடும் என்று ஊழியர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் வெகுநேரமாகியும் சாப்பாடு, குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லாமல் அவதியுற்று வந்ததாக ஊழியர்கள் குற்றம்சாட்டினர்.
ஒரு கட்டத்திற்கு சென்ற ஊழியர்கள் அனைவரும் திடீரென்று வாக்கு எண்ணும் பணியை நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு வாக்கு எண்ணும் பணி பாதிக்கப்பட்டது. இது பற்றி பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் கூறுகையில், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் எந்த வசதியும் செய்து கொடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினர்.
Source, Image Courtesy: Dinakaran