பொய் பேசுவதற்காக ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்! எடப்பாடி பழனிசாமி பேச்சு!
பொய் பேசுவதற்காக ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்! எடப்பாடி பழனிசாமி பேச்சு!
பொய் பேசுவதற்காக மு.க.ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் இன்று அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:
பழனிசாமி எப்போது பார்த்தாலும் விவசாயி, விவசாயி என சொல்லிக்கொண்டு வருகிறார் என ஸ்டாலின் சொல்கிறார். நான் விவசாயி, தன்னை விவசாயி என்றுதான் சொல்ல முடியும். ஒரு வியாபாரி தன்னை வியாபாரி என்றுதான் சொல்லுவார். வேறு எப்படி சொல்லனும் என்று ஸ்டாலின்தான் சொல்ல வேண்டும்.
நீங்கள் எதாவது தொழில் செய்திருந்தால் அதனை நீங்களும் சொல்லலாம். பாவம் ஸ்டாலினுக்கு எதுவும் இல்லை. மக்களின் உழைப்பை நம்பித்தான் உள்ளார். திமுகவினர் அனைவரும் இப்படித்தான் உள்ளனர்.
ஸ்டாலின் எப்போது பார்த்தாலும் ஆட்சியின் மீது பொய் சொல்லி வருகிறார். அவருக்கு பொய் பேசுவது என்றால் கை வந்த கலை. பொய் பேசுவதற்காக அவருக்கு நோபல் பரிசு கொடுக்கலாம். மேலும் ஆட்சி இன்னிக்கி உடையும், நாளைக்கு உடையும் என்று பேசி வருகிறார். அடுத்த வரப்போகின்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.