இப்படி பொய் சொல்லும் ஸ்டாலினுக்கு நோபல் பரிசே கொடுக்கலாம்.. முதலமைச்சர் பழனிசாமி.!

இப்படி பொய் சொல்லும் ஸ்டாலினுக்கு நோபல் பரிசே கொடுக்கலாம்.. முதலமைச்சர் பழனிசாமி.!

Update: 2021-01-07 16:29 GMT

கடந்த 2 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். ஈரோடு மாநகர் பகுதிகளில் முதலமைச்சர் இன்று 2வது நாளாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது சாலையில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் திரண்டிருந்தனர். இந்த கூட்டத்திற்கு நடுவே முதலமைச்சர் பேசியதாவது:

அம்மா மறைவிற்கு பின்னர் நடைபெறும் முதல் சட்டமன்ற பொதுத்தேர்தல் இது. அம்மா பேசியது போன்று எனக்கு பின்னால் இந்த இயக்கம் 100 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும். வாழையடிவாழையாக நின்று நாட்டு மக்களுக்கு பாடுபடும் என்று சட்டமன்றத்தில் குறிப்பிட்டார். மறைந்த எம்.ஜி.ஆர்., மற்றும் அம்மா ஆகிய இரண்டு பெரும் தலைவர்களும் நாட்டுக்காகவே வாழ்ந்து மறைந்தார்கள்.

இந்நிலையில், வேண்டும் என்றே திட்டமிட்டு ஸ்டாலின் பொய்பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அரசு மீது பழி சுமத்துவதையே வாடிக்கையாக வைத்துள்ளார். திமுக முன்னாள் அமைச்சர்கள் 13 பேர் மீது நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. ஆனால், நமது அரசு மற்றும் அமைச்சர்கள் மீது வீண்பழி சுமத்தி வருகிறார். அதிமுக ஆலமரம் போன்றது, எண்ணற்ற திட்டங்கள் இந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது ஸ்டாலினுக்கு தெரியாது.

மக்களை பற்றி சிந்திக்காமல் அவர் பேசுவது அதனத்தும் பொய். பொய் பேசுவதற்காகவே ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுத்தால் அது பொருத்தமாகும்.
எனவே இரவு, பகல் என்று பாராமல் இந்த அரசு மக்களுக்காக உழைத்து வருகிறது. எனவே வருகின்ற தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். 
 

Similar News