நாளை இரண்டு இடங்களில் தேவருக்கு மரியாதை செய்யும் முதல்வர் ஸ்டாலின் !

Update: 2021-10-29 08:43 GMT

நாளை அக்டோபர் 30'ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவில் தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராம லிங்கத்தேவரின் 114'வது ஜெயந்தி விழா மற்றும் 59'வது குருபூஜை விழா 28, 29, 30 ஆகிய 3 நாட்கள் நடக்கிறது. தேவர் குருபூஜையை முன்னிட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். இதற்காக அவர் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மதுரை வருகிறார். முதலில் கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் தெப்பக்குளத்தில் உள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கு அவர் மாலை அணிவிக்கிறார். தொடர்ந்து காரில் பசும்பொன் புறப்பட்டுச் செல்கிறார்.

பின்னர் பகல் 11 மணிக்கு பசும்பொன் சென்றடையும் மு.க.ஸ்டாலின் அங்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்ட தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். தொடர்ந்து முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திலும் அவர் மரியாதை செலுத்துகிறார். அதன்பின் அவர் கார் மூலம் மதுரை விமான நிலையம் வந்து, சென்னை புறப்பட்டுச் செல்கிறார். கடந்த ஆண்டு தேவரின் குருபூஜை விழாவில் ஸ்டாலின் அங்கு வழங்கப்பட்ட விபூதியை கீழே கொட்டியது பெரும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடதக்கது.


Source - Maalai malar

Tags:    

Similar News