வேல் தூக்கும் கட்டாயத்திற்கு ஸ்டாலின் தள்ளப்பட்டுள்ளார்.. பா.ஜ.க. தலைவர் பேச்சு.!

வேல் தூக்கும் கட்டாயத்திற்கு ஸ்டாலின் தள்ளப்பட்டுள்ளார்.. பா.ஜ.க. தலைவர் பேச்சு.!

Update: 2021-01-24 13:25 GMT

தமிழகத்தில் வேல் தூக்க வேண்டிய கட்டாயத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தள்ளப்பட்டுள்ளார் என தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த காலங்களில் தி.மு.க. தி.க., இந்துக்கடவுள்களை எவ்வளவு கொச்சைப்படுத்த முடியுமோ அவ்வளவு கொச்சைப்படுத்தியது. இதற்கு உறுதுணையாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இருந்தார் என்பது இந்துக்கள் அனைவருக்குமே தெரியும். அதிலும் தமிழ் கடவுளான முருகனை பற்றி கருப்பர் என்ற யூடியூப் சேனலில் மிகவும் ஆபாசமான முறையில் விமர்சனம் செய்தனர். இதன் பின்னர் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. இதன் பின்னர் தமிழகத்தில் இந்துக்கள் மத்தியில் ஸ்டாலினுக்கு மற்றும் தி.க.வை சேர்ந்த வீரமணி, சுபவீரபாண்டியன் உள்ளிட்டோருக்கு கடும் கண்டனங்கள் எழுந்தது.

தற்போது தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி ஸ்டாலின் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற தி.மு.க. நிகழ்ச்சியில் கையில் வேலை பிடித்துக்கொண்டு போஸ் கொடுத்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் கண்டனத்துக்கு ஆளானது. இந்துக்கடவுளை எவ்வளவு கீழ்த்தரமான முறையில் விமர்சனம் செய்து விட்டு இப்போது எந்த தைரியத்தில் வேலை தொட்டார் என கேள்விகள் எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகம் முழுவதும் பிப்ரவரி மாதத்தில் பா.ஜ.க. மாநாடு நடைபெறும். வேல் தூக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஸ்டாலின் தள்ளப்பட்டுள்ளார். ஸ்டாலினையே வேல் தூக்க வைத்தது தான் பாஜகவின் வேல் யாத்திரைக்கு கிடைத்த வெற்றி.

சட்டப்பேரவை தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக இரட்டை வேடம் போடும் ஸ்டாலினை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள் என கூறினார்.
மேலும், மிக விரைவில் சட்டமன்ற தேர்தலில் முருகனின் வேல் திமுகவை விரட்டியடிக்கும். வரும் காலங்களில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அதிகமானோர் சட்டமன்றத்திற்கு செல்வார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
 

Similar News