எம்.ஜி.ஆர் பிம்ப அரசியல் - போட்டி போடும் ஸ்டாலின், கமல்.!

எம்.ஜி.ஆர் பிம்ப அரசியல் - போட்டி போடும் ஸ்டாலின், கமல்.!

Update: 2020-12-18 06:30 GMT

ஆள்பவர்களை பதவியில் இருக்கும் வரைதான் மக்களுக்கும், பிற அரசியல்வாதிகளுக்கும் ஞாபகம் இருக்கும் பின் காலப்போக்கில் மறந்து விடுவர் இது இயல்பு. ஆனால் சிலரை மட்டுமே ஆளும் போதும், ஆண்டு மறைந்த பிறகும் ஆண்டாண்டு காலம் மக்களும் சரி, பிற அரசியல்வாதிகளும் சரி, ஆட்சி பீடத்திற்கு வர துடிக்கும் கட்சித் தலைவர்களும் சரி ஞாபகம் வைத்து "அவரை போல் நான் ஆட்சி செய்வேன்", "அவரின் பிம்பமாக இருப்பேன்", "அவரின் தொடர்ச்சிதான் நான்" என மறைந்த "அந்த தலைவருடன்" தன்னை ஒப்பிட்டு கூறுவர்.

அப்படி தமிழக அரசியல் மறைந்தும் மக்கள் மனங்களில் மட்டுமல்ல, ஆளும் ஆசை கொண்ட அரசியல்வாதி'களின் வார்த்தைகளிலும் ஒர் தலைவர் வாழ்கிறார் என்றால் அது "மக்கள் திலகம்", "பொன்மனச்செம்மல்" "டாக்டர்.எம்.ஜி.ஆர்" மட்டுமே.

இன்றும் கூட ஆட்சியில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி முதல், எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற நினைக்கும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் முதல், சென்ற வருடம் கட்சியை துவங்கி வரும் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் "மக்கள் நீதி மய்யம்" கமல்ஹாசன் வரை அனைவரும் ஒருசேர கூறுவதும், போற்றுவதும், மக்கள் மனதில் இடம்பிடிக்க பயன்படுத்தும் ஒரே பெயர் எம்.ஜி.ஆர் தான்.

கடந்த இரு தினங்கள் முன் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் மதுரையில் "எம்.ஜி.ஆரின் தொடர்ச்சி நான்" என்றார். இன்றோ தி.மு.க தலைவர் எடப்பாடி'யை எம்.ஜி.ஆரின் பாடலாகிய 
"சிலர் ஆசைக்கும், தேவைக்கும், வாழ்வுக்கும், வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்" என்ன பாடல் வரிகளை பாடி தி.மு.க தலைவர் விமர்சித்துள்ளார்.

காரணம் ஒருவர் இறந்தும் அவர் கண்டறிந்த சின்னம் மக்கள் மனதில் இருக்கிறது என்றால் அது எம்.ஜி.ஆர் கண்ட இரட்டை இலை சின்னம்'தான். சின்னம் மட்டுமல் இன்றும் அரசியலில் மக்கள் எம்.ஜி.ஆரின் ஆட்சியை எதிர்நோக்கி காத்துள்ளனர். ஆகையினால் தான் ஆட்சி தாகத்தில் இருக்கும் ஸ்டாலினும், ஆட்சியை நோக்கி படையெடுக்கும் கமல்ஹாசனும் எம்.ஜி.ஆரை போட்டி போட்டுக்கொண்டு தன் மேடைகளில் பேசு பொருளாக எடுத்துக்கொள்கின்றனர்.

ஏன் எம்.ஜி.ஆரை எதிர்த்து களம் கண்ட கருணாநிதியின் மகனான ஸ்டாலின் கூட எடப்பாடியை விமர்சிக்க மிகப்பெரிய எழுத்தாளரான கருணாநிதி'யின் வசனங்களை மேற்கோள் காட்டாமல் எம்.ஜி.ஆரின் பாடல்களை துணை கொண்டுள்ளார்.

எம்.ஜி.ஆர் என்பவர் வெறும் சொல் அல்ல மக்கள் மனதில் வாழும் ஓர் அழிக்க முடியா எண்ணம்.

Similar News