"ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் வாபஸ்" எடப்பாடியின் அடுத்த சிக்ஸர்! திணறிபோகும் ஸ்டாலின்!

"ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் வாபஸ்" எடப்பாடியின் அடுத்த சிக்ஸர்! திணறிபோகும் ஸ்டாலின்!

Update: 2021-02-06 08:23 GMT

கடைசி பத்து ஓவரில் பட்டாசாக விளையாடும் பேட்ஸ்மேன்கள் போன்று தமிழக முதல்வர் எடப்பாடியின் அறிவிப்புகள் அனைத்தும் அதிரடி சிக்ஸர்களாகவே இருக்கின்றன நேற்று விவசாய வேளான் கடன்கள் தள்ளுபடி என அறிவித்த உடன் அதே சூட்டோடு ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது காவல்துறை பதிவு செய்த வழக்குகள் திரும்பப் பெறப்பட வேண்டும் என பலரும் கேட்டுக் கொண்ட நிலையில் அந்த அத்தனை வழக்குகளையும் வாபஸ் பெற்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

கடந்த காலங்களில்  காங்கிரஸ் மத்திய அரசில் அங்கம் வகிக்கும்போது தமிழகத்தின் பாரம்பர்ய விளையாட்டான 
ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்திருந்தது. இதனால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள்  தடைவிதிக்கப்பட்ட நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.

குறிப்பாக மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் உலக நாடுகள் வரை எதிரொலித்தது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற பல்வேறு இளைஞர்கள், அமைப்புகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெற வேண்டும் என்று அ.தி.மு.க சோழவந்தான் எம்.எல்.ஏ மாணிக்கம், நேற்று சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது வலியுறுத்தினார்.

அதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் ஏற்றுக்கொள்ளக்கூடாத  நிகழ்வுகளான காவல்துறையினரை தாக்கிய வழக்குகளை தவிர்த்து மற்ற வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்றும் தெளிவாக தமிழக முதல்வர் எடப்பாடி க.பழனிசாமி  கூறியுள்ளார்.


இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போராட்டத்தில் உண்மையான உணர்வுடன் போராடிய அனைத்து இளைஞர்களுக்கும் திருப்தியான உணர்வு ஏற்பட்டுள்ளது. மேலும் தி.மு.க ஒருபுறம் உருண்டு புரண்டு பிரச்சாரம் செய்தும் மக்களிடம் எடுபடாத நிலையில் தமிழக முதல்வரின் அறிவிப்புகள் மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன இதனால் செய்வதறியாது தி.மு.க'வினர் திகைத்து நிற்கின்றனர்.

Similar News