அ.தி.மு.க. அரசு தொடர்ந்த வழக்கில் ஸ்டாலின் ஆஜராக உத்தரவு !

கடந்த அதிமுக அரசின்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு களங்கம் கற்பிக்கும் விதமாக பேசியதாக, தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ஆஜராகுமாறு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Update: 2021-08-12 03:52 GMT

கடந்த அதிமுக அரசின்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு களங்கம் கற்பிக்கும் விதமாக பேசியதாக, தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ஆஜராகுமாறு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது வாக்கி டாக்கி கொள்முதல் செய்தது மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குறித்தும் கடந்த 2020 நவம்பரில் ஸ்டாலின் கருத்து கூறியிருந்தார். இதன் காரணமாக முதலமைச்சர் ஸ்டாலின் மீது அவதூறு வழக்குகள் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி சிவகுமார் முன்பாக விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் ஆஜராக ஸ்டாலினுக்கு ஏற்கனவே மூன்று முறை சம்மன் அனுப்பி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதனிடையே தற்போது மீண்டும் சம்மன் அனுப்பி நீதிபதி உத்தரவிட்டார். வருகின்ற 16ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நீதிபதி சம்மன் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Dinamalar

Image Courtesy:one india Tamil

https://www.dinamalar.com/news_detail.asp?id=2821203

Tags:    

Similar News