234 தொகுதியிலும் வெல்வோம்! ஸ்டாலினின் பேராசை பேச்சு! தோல்வி பயத்தில் உளறுகிறாரா?

234 தொகுதியிலும் வெல்வோம்! ஸ்டாலினின் பேராசை பேச்சு! தோல்வி பயத்தில் உளறுகிறாரா?

Update: 2021-01-18 08:35 GMT

அரசியல் கட்சி தலைவர்களுக்கு நம்பிக்கை இருக்கலாம் ஆனால் பேராசை இருக்க கூடாது. வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெல்வோம் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேராசையுடன் கூறியுள்ளார்.

நேற்று காலை காலை திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக நடைபெற்ற விழாவில் பேசிய ஸ்டாலின் கூறியதாவது, "விரைவில் தமிழ்நாட்டில் ஒரு மாற்றத்தை எதிர்நோக்கி நாம் காத்திருக்கிறோம். இன்னும் நான்கு மாதங்கள்தான்.

தேர்தலைச் சந்திக்க இருக்கிறோம். அந்தத் தேர்தலை நாம் எதிர்பார்ப்பதை விட, இந்த மேடையில் இருக்கக்கூடிய நாங்கள் எதிர்பார்ப்பதை விட, நீங்கள் எதிர்பார்ப்பதை விட, ஒட்டுமொத்தத் தமிழ்நாடே எதிர்பார்த்துக் காத்திருப்பது எதற்காக என்றால், தி.மு.க. உடனடியாக ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக!" என்றார்.

மேலும் அ.தி.மு.க'வை பற்றி விமர்சித்து பேசிய அவர், "நீங்கள் என்னதான் பிரச்சாரம் செய்தாலும் - குட்டிக்கரணம் போட்டாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஆட்சிக்கு அல்ல; எதிர்க்கட்சியாகக் கூட நீங்கள் வர முடியாத சூழல் தான் நிலவுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, எதிர்வரும் தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் நாம் வெற்றி பெறுவோம் என்று கூறியிருந்தேன்.

இப்போது நாம் மக்கள் கிராமசபைக் கூட்டங்களை உற்சாகத்துடன் நடத்தி, மக்களைத் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கிறோம். மக்களின் மனநிலையைப்ப பார்க்கும்போது, 234-க்கு 234 இடங்களையும் நாம் பெறுவோம் என்ற நம்பிக்கை வருகிறது. இதுதான் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலை" என்று அதீத நம்பிக்கையுடன் பேசினார்.

இதுபற்றி தி.மு.க'வின் மூத்த உடன்பிறப்புகள் சிலரிடம் பேசிய போது, "எங்க தலைவர் கலைஞரே இப்படி பேச மாட்டாருங்க, இப்படி அதீத நம்பிக்கைதான் கடந்த பத்து வருஷமா நாங்க எதிர்கட்சியா உட்காந்துருக்கோம். இப்பவும் இவர் பேசுற பேச்சு பார்த்தா எங்களுக்கு நம்பிக்கை இல்லைங்க. கட்சில உட்கட்சி பூசல் அவ்ளோ இருக்கு, நிறைய மூத்த உறுப்பினர்கள் அதிருப்தில இருக்குறாங்க இதை பார்க்காம இவர் மத்த கட்சி இருக்கற ஆட்களை இறக்கு வேலைய பார்க்குறார். என்னத்த சொல்றது" என்றார் விரக்தியுடன்.

Similar News