ஸ்டாலின் மனைவியே திமுகவிற்கு ஓட்டு போடமாட்டார்.. அமைச்சர் செல்லூர் ராஜு.!

ஸ்டாலின் மனைவியே திமுகவிற்கு ஓட்டு போடமாட்டார்.. அமைச்சர் செல்லூர் ராஜு.!

Update: 2020-12-17 15:09 GMT

மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து பேச எதிர்க்கட்சிக்கு எந்த அறுகதையும் இல்லை. அவர்கள் ஆட்சியில் இருந்த போது என்ன செய்தார்கள்?. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த முதல் கட்சி அதிமுக தான். கமல் எல்லாம் ஒரு தலைவரே இல்லை. பிரச்சாரத்தில் அவர் என்ன பேசுகிறார் என்று அவருக்கே தெரியவில்லை என கூறினார்.

தொடர்ந்து, அம்மா சிமெண்ட் அம்மா குடிநீர் திட்டத்தை பற்றியெல்லாம் கமலுக்கு என்ன தெரியும்? விலையை கட்டுப்படுத்த தான் இந்த திட்டங்கள் எல்லாம் கொண்டு வரப்பட்டது.  திமுக ஆட்சியில் என்ன கொண்டு வந்தார்கள்? அதனை பற்றி அவர்களுக்கு பேச தெம்பு இருக்கிறதா? தேர்தல் அறிக்கையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக குறிப்பிட்டிருக்கும் திமுக, தமிழகத்திற்கு அந்த சட்டங்கள் பொருந்தாது என்பதையே உணரவில்லை. போராட்டம் நடத்தியே ஓட்டு வாங்க விரும்பும் கட்சி தான் திமுக என்று கடும் விமர்சனத்தை வைத்தார்.

மேலும், அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் தமிழக மக்களுக்கு தெரியும். உள்ளாட்சியில் போட்டியிடுவதற்கு பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு கொடுத்ததே அதிமுக அரசு தான். திமுக தலைவர் ஸ்டாலினின் மனைவியே அதிமுகவுக்கு தான் ஓட்டுப் போடுவார் என்றும் கூறினார். 

இவரது பேச்சைக்கேட்டு திமுக தொண்டர்களே சற்று மிரண்டு போய்விட்டனர் என்றால் அது மிகையாகாது. திமுக தலைவர் ஸ்டாலின் மனைவி ஓட்டு போடமாட்டாரா என்று தற்போதே பேசிக்கொள்வதை காணமுடிகிறது. இந்த தடவையும் திமுக ஆட்சியை பிடிக்காத என்ற மனநிலையை அவரது கட்சியினர் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
 

Similar News