'மாநில அரசுகள் 50 சதவீதம் வரியை குறைத்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்' - பெட்ரோலியத் துறை அமைச்சர்
Petrol, diesel tax should be reduced by state government;
மாநில அரசுகள் பெட்ரோல் பொருள்கள் மீதான வாட் வரியை 50 சதவீதம் குறைக்க வேண்டும்' என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீர்சிங் பூரி அறிவுறுத்தி உள்ளார்.
மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் சார்பில் டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீர்சிங் பூரி கூறியதாவது, 'பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு சமீபத்தில் குறைத்து குறிப்பிடத்தக்கது. மாநில அரசுகள் மக்களின் நன்மைக்காக தங்களின் வாட் வரியை 50 சதவிகிதம் குறைத்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை வேண்டும்' என கூறினார்.
குறிப்பாக பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும், மாநில அரசுகள் அதிக வரியை வசூல் செய்துவிட்டு மத்திய அரசை குறை கூறுவது எந்த விதத்தில் நியாயம்?' என கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் கூறியதாவது, 'எண்ணெய் நிறுவனங்கள் தான் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றனர். இந்த நிறுவனங்களை மத்திய அரசு ஒன்றும் கட்டுப்படுத்துவதில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள முடக்கமும், தேவையும் இந்த விலை ஏற்றத்திற்கு காரணம், நாட்டில் விலைவாசி உயர்வினை நங்கள் கூர்ந்து கவனித்து வருகிறோம் இது கவலைக்குரிய அம்சம். ஒரு அளவுக்கு மேல விலைவாசி உயர்வது அனுமதிக்க முடியாது' எனவும் தெரிவித்துள்ளார்.