'நீங்கள் நடித்ததோ கெத்து! நீங்கள்தான் தமிழ்நாட்டின் சொத்து!!' - உதயநிதி புகழ்பாடும் அமைச்சர்கள்
மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டப்பேரவை உதயநிதி ஸ்டாலினை புகழ்ந்து பேசியது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.;
மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டப்பேரவை உதயநிதி ஸ்டாலினை புகழ்ந்து பேசியது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தற்பொழுது தமிழ்நாடு சட்டப்பேரவையில் பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இதில் முந்தைய கூட்டங்களை விட தற்போது உதயநிதி ஸ்டாலினை அமைச்சர்கள் தி.மு.க எம்.எல்.ஏ'க்கள் புகழ்ந்து பேசுவது அதிகரித்து வருகிறது, அந்த வகையில் மின்சாரத்துறை அமைச்சர் உதயநிதி செந்தில் பாலாஜி உதயநிதியை கவிதையை போல் வசனம் பேசி வாழ்க்கை உள்ளார்.
செந்தில்பாலாஜி பேசியதாவது, 'பூவைப் போன்ற எழில் முகம், எப்போதும் நெஞ்சத்து பசுமை காட்டும் பொழில் முகம், தேனினும் இனிய குணம், வானிலும் பெரிய மனம், பொல்லாத மனிதர்கள் வீசிடும் விமர்சன முட்கள் கூட பொன்னான உங்கள் முகத்தில் பூக்களாய் மாறி கம்பளம் விரிக்கும். வில்லேந்தி ஆயிரம் பேர் களத்தில் நின்றாலும் இனிமையான சொல் ஏந்தி வரும் எங்கள் சின்னவரே! உள்ளங்கள் வெல்வதை கொள்கையாக கொண்டவரே!' என புகழ்ந்து பேசினார்.
இதேபோல் நேற்று அமைச்சர் பி.மூர்த்தியும் உதயநிதி ஸ்டாலினை வாழ்க்கை பேசியுள்ளார் அவர் தனது உரையில், 'அன்புக்கு இலக்கணம் ஆருயிர் உதயநிதி அவர்களே நீங்கள் நடித்ததோ ஒரு கல் ஒரு கண்ணாடி ஆனால் நீங்கள் வீசிய ஒரு செங்கல் கடந்த ஆட்சியில் அல்லவா உடைத்து விட்டது நீங்கள் நடித்ததோ கெத்து, உங்கள் தான் தமிழ்நாட்டில் சொத்து, எதிரிகளைத் தன சிரிப்பால் நண்பேண்டா என சொல்ல வைக்கும் அன்பு நீங்கள்! உங்கள் நடிப்பில் உருவானதோ மனிதன், நிஜத்தில் நீங்க தான் மாமனிதர்' என புகழ்பாடி சட்டமன்றத்தில் பேசினார் அமைச்சர் பி.மூர்த்தி.