'தமிழ்நாட்டை விட்டு வெளியே போங்க' - ஆளுநர் ஆர்.என்.ரவியை எச்சரிக்கும் எஸ்.டி.பி.ஐ

தமிழகத்தை விட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தை விட்டு வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-06-04 13:30 GMT

தமிழகத்தை விட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தை விட்டு வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் வேலையை செய்யாமல் ஆர்.எஸ்.எஸ் ஊதுகுழலாக செயல்படுகிறார் என கூறி அவரை உடனே மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சியினர் சென்னையில் பேரணி நடத்தினர்.

சென்னை கிண்டியில் தமிழக ஆளுநரின் மாநில சுயாட்சி எதிர்ப்பு, சிறுபான்மை விரோத போக்கு, 7 தமிழர் விடுதலை, உள்ளிட்ட 20 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காரணம் காண்பித்து எஸ்.டி.பி.ஐ மற்றும் இன்னும் சில இயக்கங்கள் இணைந்து ஆளுநருக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆளுநருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது பேசிய எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறுகையில், 'தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சட்டமன்றத்தில் இறையாண்மையை மதிக்காமல் நாகலாந்து மக்களைப் போல் தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறார். தமிழக ஆளுநர் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க வின் ஊதுகுழலாக செயல்பட்டு வருகிறார். தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்துள்ளார். குறிப்பாக ஆர்எஸ்எஸ் ஊதுகுழலாக செயல்படும் ஆளுநர் பதவியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

தமிழகத்தை விட்டு ஆளுநர் வெளியேறவில்லை என்றால் அவரை வெளியேற்றும் விதமாக எங்களது அடுத்த கட்ட போராட்டங்கள் இருக்கும்' என அவர் எச்சரித்துள்ளார்.


Source - Asianet News Tamil

Similar News