'ஆசிரியர்களிடம் உள்ள கண்டிப்பை பறித்ததால், இன்று மாணவர்கள் தறிகெட்டு நிற்கின்றனர்' - கொதிக்கும் அர்ஜுன் சம்பத்

'ஆசிரியர்களிடம் உள்ள கண்டிப்பு பறிபோய் விட்ட காரணத்தினால் இன்றைய மாணவர்கள் ஒழுக்கம் கேட்டு எதிர்மறையான சிந்தனையுடன் வளர்கின்றனர்' என இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.

Update: 2022-07-23 09:11 GMT

'ஆசிரியர்களிடம் உள்ள கண்டிப்பு பறிபோய் விட்ட காரணத்தினால் இன்றைய மாணவர்கள் ஒழுக்கம் கேட்டு எதிர்மறையான சிந்தனையுடன் வளர்கின்றனர்' என இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.

சமீபகாலமாக மாணவர்கள் ஆசிரியர்கள் முன் ஒழுங்கீனமாக நடந்து கொள்வது மேலும் சமூக வலைதளங்களில் மாணவர்கள் செய்யும் சேட்டைகள் வீடியோக்களாக வலம் வருகின்றன. மேலும் தற்கொலைகள் போன்ற விஷயங்கள் அதிகரித்து வரும் நிலையில் இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 'ஆசிரியரிடம் உள்ள கண்டிப்பு பறிக்கப்பட்டதன் காரணமாக மாணவர்கள் மத்தியில் கட்டுப்பாடு, ஒழுக்கம், எதிர்மறை சிந்தனை, போதை பழக்கம் அதிகம் ஆகிவிட்டது இது ஒரு தவறான சமுதாயத்தை வளர்த்திருக்கிறது ஆசிரியர்கள் கைகளில் மீண்டும் கட்டுப்பாடு வேண்டும். ஒழுக்கமான மனநிலையில் சமுதாயம் உருவாக வேண்டும்' என அவர் பதிவிட்டுள்ளார்.

Similar News