"வாரிசு அரசியல் நாட்டை கீழ் நோக்கி இழுக்கின்றது" - ராஜஸ்தானில் கொதித்த மோடி
'வாரிசு அரசியல் நாட்டை கீழ் நோக்கி இழுக்கின்றது இளைஞர்களுக்கும் நாட்டுப்பற்று மிக்கவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும்' என பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார்.
'வாரிசு அரசியல் நாட்டை கீழ் நோக்கி இழுக்கின்றது இளைஞர்களுக்கும் நாட்டுப்பற்று மிக்கவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும்' என பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னேற்பாடாக இருக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் பா.ஜ.க நிர்வாகிகளிடம் காணொளி மூலம் உரையாற்றினர், இந்த கூட்டத்தில் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அப்பொழுது பிரதமர் பேசியதாவது, 'இந்த மாதத்துடன் பா.ஜ.க ஆட்சிக்கு வந்து எட்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது இந்த காலகட்டத்தில் ஏழைகளின் நலன் சார்ந்த வளர்ச்சி, சமூக நிதி, நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நம்மிடம் 1300க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ'க்கள், 400க்கும் மேற்பட்ட எம்.பி'க்கள், 100க்கும் மேற்பட்ட மாநிலங்களவை உள்ளன நாம் இந்த அதிகாரத்தை அனுபவிப்பதில் கவனம் செலுத்தவில்லை மாறாக 2012ஆம் ஆண்டுக்கு முன் நம்பிக்கை இழந்து காணப்பட்ட மக்களின் வளர்ச்சிக்காக நமது கவனத்தை செலுத்தி வருகிறோம்' என்றார்.
மேலும் பேசிய அவர், 'சில அரசியல் கட்சிகள் சமூகத்தில் சாதி, மதத்தின் பெயரால் விஷத்தை விதைக்க முயற்சி செய்கிறார்கள் என மக்களிடம் தெளிவுபடுத்தி அவர்களை எச்சரிக்கையுடன் வைத்திருக்க வேண்டும். நம் நாட்டு நலனில் இருந்து திசை திருப்பும் செயல்களை மற்ற அரசியல் கட்சிகள் செய்யலாம் நாம் அதில் சிக்கிக் கொள்ளக் கூடாது' என்றார்.
"வாரிசு அரசியல் நாட்டை கீழ் நோக்கி இழுக்கின்றது, இளைஞர்களுக்கும் நாட்டுப்பற்று மிக்கவர்களுக்கு மேலே உயரும் வாய்ப்பு கிடைக்க வேண்டும், பா.ஜ.க அனைத்து இந்திய மொழிகளுக்குமான கட்சியாகும் நாங்கள் அனைத்து மொழிகளையும் மதிப்பவர்கள், நாங்கள் அனைத்து குடி மக்கள் மீதும் நம்பிக்கை வைத்துள்ளவர்கள்" என்றார் பிரதமர் மோடி.