நந்திகிராம் தொகுதியில் பின்னடைவை சந்தித்த மம்தா பானர்ஜி.. கெத்து காட்டும் பா.ஜ.க.!

மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையேதான் போட்டி நிலவி வருகிறது.

Update: 2021-05-02 05:12 GMT

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. அதில் நந்திகிராம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி பின்னடைவை சந்தித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையேதான் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில், மேற்கு வங்கம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி முன்னிலைப் பெற்றுள்ளார்.

Similar News