தமிழ் அகாடமி.. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தமிழக முதலமைச்சர் நன்றி.!
தமிழ் அகாடமி.. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தமிழக முதலமைச்சர் நன்றி.!
டெல்லியில் தமிழ் அகாடமி அமைத்த அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் மூலமாக நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழ் கலாச்சாரத்தின் பெருமைகளையும் பரப்புகின்ற வகையில், டெல்லியில் ‘‘தமிழ் அகாடமி அமைத்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதலமைச்சர் மணிஷ் சிஷோடியா ஆகியோருக்கு தமிழக அரசின் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அகாடமியால் தமிழர்களுக்கு நல்ல பயனை அளிக்கும். அது மட்டுமின்றி வடமாநிலத்தில் உள்ளவர்கள் தமிழ் கலாச்சாரத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கு இந்த அகாடமி பெரிதும் உதவும் என அம்மாநில துணை முதலமைச்சர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.