'சினிமா நிகழ்ச்சின்னா முன்னாடி நிற்பார்' - பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷை வெளுத்த அண்ணாமலை

'அமைச்சர் அன்பில் மகேஷ் அமைச்சர் வேலையை தவிர மற்ற எல்லா வேலையும் பார்க்கிறார்' என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

Update: 2022-06-14 07:38 GMT

'அமைச்சர் அன்பில் மகேஷ் அமைச்சர் வேலையை தவிர மற்ற எல்லா வேலையும் பார்க்கிறார்' என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நேற்று கோவையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார், அனைத்து அமைச்சர்களையும் செயல்பாடுகளைப் பற்றியும் செய்தியாளர்களிடம் எடுத்துரைத்தார்.

அப்போது குறிப்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பற்றி அவர் குறிப்பிடும் பொழுது, 'ஒரு அமைச்சர் எப்படி எல்லாம் இருக்க கூடாது என்பதற்கு அன்பில் மகேஷ் உதாரணமாக இருக்கிறார். அவரை சினிமா ட்ரெய்லர் வெளியீடு நிகழ்ச்சி, சூட்டிங் போன்ற இடங்களில் தான் பார்க்க முடிகிறது' என்றார் அண்ணாமலை.

மேலும் பேசிய அவர், 'அமைச்சர் வேலையே தவிர அனைத்து வேலையையும் பார்க்கிறார், பார்க்காத ஒரே வேளை ஐ.பி.எல் மேட்ச் கமென்ட்ரி மட்டும்தான் பண்ணவில்லை' என அண்ணாமலை கூறினார்.

சமீபத்தில் பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கேள்விக்குறியாகி வரும் நிலையில் அண்ணாமலை இப்படி விமர்சித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Source - Junior Vikatan

Similar News