தமிழ் மாநிலம் மத்திய அரசு கூறியும் வரியை குறைக்கவில்லை, அதனால் பெட்ரோல், டீசல் விலை அதிகம் - பிரதமர் மோடி

மத்திய அரசின் வார்த்தைகளுக்கு செவி கொடுக்காமல் மாநில அரசுகள் மக்களுக்கு கூடுதல் வரியை சுமையாக அளிக்கிறது என பிரதமர் மோடி என்று பேசியுள்ளார்

Update: 2022-04-27 11:45 GMT

மத்திய அரசின் வார்த்தைகளுக்கு செவி கொடுக்காமல் மாநில அரசுகள் மக்களுக்கு கூடுதல் வரியை சுமையாக அளிக்கிறது என பிரதமர் மோடி என்று பேசியுள்ளார்.

பெட்ரோல் டீசல் மீதான வாட் வரி கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு குறைத்து நிலையில் தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் குறைக்கவில்லை வரியை குறைக்க காரணத்தினால் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது என பிரதமர் மோடி கூறினார்.

கொரோனா தொடர்பான மாநில அரசு கூட்டத்தில் வாட் வரி குறித்து பேசிய பிரதமர் மோடி கூறியதாவது, 'வாட் வரியை குறைக்காததுதான் தான் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க காரணம் மத்திய அரசின் வார்த்தைகளுக்கு செவி கொடுக்காமல் தமிழ் நாடி, மேற்கு வங்கம் போன்ற மாநில அரசுகள் மக்களுக்கு கூடுதல் சுமை அளிக்கிறது' என பேசினார்.

கடந்த தீபாவளி பண்டிகை அன்று தீபாவளி பரிசாக பெட்ரோல் விலை ரூ.5 லிட்டருக்கு மத்திய அரசு குறைத்தது குறிப்பிடத்தக்கது.


Source - ABP Nadu

Tags:    

Similar News