இந்தியாவின் ஆன்மீக தலைநகரம் தமிழகம்தான் - தெறிக்கவிடும் ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழ்நாடுதான் இந்தியாவின் ஆன்மீக தலைநகரம் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
தமிழ்நாடுதான் இந்தியாவின் ஆன்மீக தலைநகரம் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற மீன்வளத்துறை கருத்தரங்கில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பேசினார், இந்த நிகழ்ச்சியில் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்பொழுது பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாவது, 'தமிழ்நாடுதான் இந்தியாவின் ஆன்மீக தலைநகரம், இந்தியாவை நம்பர் 1 நாடாக்கும் குறிக்கோளுடன் பிரதமர் மோடி பணியாற்றுகிறார். இதனால்தான் 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' எனக் கூறுகிறார்' என்றார்.
மேலும் பேசிய அவர், 'இந்தியா 150 நாடுகளுக்கு தடுப்பூசியை கொடுத்துக் கொண்டிருக்கிறது இதுதான் புதிய இந்தியா, இந்தியா ஒரு இலக்குடன் செயல்பட்டு வருகிறது அடுத்த 25 ஆண்டுகளில் உலகின் முதன்மையான நாடாக இந்தியாவை மாற்றுவதுதான் நமது இலக்கு. உலகின் முதன்மையான நாடாக மாறுவதற்கான அனைத்து தகுதிகளையும் இந்தியா பெற்றிருக்கிறது' ஆளுநர் ஆர்.என்.ரவி.