பேரூராட்சிகளில் வெற்றியை தொடர்ந்து பெரிய கட்சியாக உருவெடுக்கிறதா பா.ஜ.க.!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பேரூராட்சிகளில் ஏராளமான வார்டுகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

Update: 2022-02-22 10:46 GMT

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பேரூராட்சிகளில் ஏராளமான வார்டுகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த பிப்ரவரி 19ம் தேதி நடைபெற்றது. இதில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பாஜக தனித்து களம் கண்டது. அதே போன்று மற்ற கட்சிகளான அதிமுக, திமுக கூட்டணி அமைத்தும், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சியினர் தனித்து களத்தில் இறங்கினர்.

இந்நிலையில், இன்று தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பெரும்பாலான மாநகராட்சிகளை திமுக கைப்பற்றும் நிலை உருவாகியுள்ளது. அதற்கு அடுத்து அதிமுக கைப்பற்றயுள்ளது. இதனிடையே பேரூராட்சிகளில் பெரும்பாலான இடங்களில் பாஜக கைப்பற்றியுள்ளது. இதனால் பேரூராட்சிகளில் மிகப்பெரிய கட்சியாக பாஜக வளர்ந்திருப்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.

Source, Image Courtesy: One India Tamil

Tags:    

Similar News