சென்னை வந்தடைந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவை வரவேற்ற தமிழக அமைச்சர்கள்.!

சென்னை வந்தடைந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவை வரவேற்ற தமிழக அமைச்சர்கள்.!

Update: 2020-11-21 14:16 GMT

2 நாட்கள் அரசு முறை பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகை புரிந்துள்ளார். விமான நிலையத்தில் தமிழக அமைச்சர்கள், கே.பி.அன்பழகன், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் வரவேற்றனர். 


அவர்களுடன் தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி, மற்றும் தமிழக பாஜக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். மேலும், விமான நிலையம் வெளியே தயார் நிலையில் மேளத்தாளங்களுடன் தொண்டர்களுடன் காத்திருக்கின்றனர். 


மத்திய அமைச்சர் வருகையால் சென்னை நகரம் முழுவதும் எங்கு பார்த்தாலும் பாஜக தொண்டர்களை காண முடிகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு முக்கிய ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Similar News