கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் ஒமைக்ரான் பற்றி கவலை இல்லை - தமிழிசை சவுந்தரராஜன் !

Update: 2021-12-02 14:00 GMT

"கட்டுபாடுகளை தொடர்ந்து கடைபிடித்தால் ஒமைக்ரான் புதிய வைரஸ் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை" என ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.


புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் அனைத்து நாடுகளும் விமான் போக்குவரத்து கட்டுப்பாடு, பயணிகள் வழிமுறை என தயாராகி வருகின்றனர். இந்தியாவிலும் கர்நாடக மாநிலத்தில் இருவருக்கு பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.


இந்நிலையில் சேலத்திற்கு வந்த தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது, "புதிய வகை ஒமைக்ரான் கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். முதல் தவணை தடுப்பூசியை போட்டவர்கள் 2-வது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

வைரஸ் வகையில் மாற்றம் இருந்தாலும் பாதுகாப்பு முறைகள் என்பது ஒன்றுதான். ஏற்கனவே உள்ள கட்டுபாடுகளை தொடர்ந்து கடைபிடித்தால் ஒமைக்ரான் புதிய வைரஸ் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்" என ஆளுநர் தமிழிசை கூறினார்.


Source - Maalai malar

Similar News