மக்கள் திட்டங்களுக்கு பணம் இல்லை ! அண்டை மாநிலங்களில் பக்கம், பக்கமாக விளம்பரம்! -தி.மு.க. அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

தமிழக பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றால் பொருளாதாரம் மிகவும் மோசமான சரிவினைக் கண்டுள்ள நிலையில், அரசு நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றது. அதே சமயம் கடனும் உயர்ந்து கொண்டே வருகிறது.

Update: 2021-08-21 00:20 GMT

தமிழக பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றால் பொருளாதாரம் மிகவும் மோசமான சரிவினைக் கண்டுள்ள நிலையில், அரசு நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றது. அதே சமயம் கடனும் உயர்ந்து கொண்டே வருகிறது.

இந்திய நாட்டில் உள்ள பிற மாநிலங்களிலும் கடன் வாங்குவார்கள். ஆனால் அவை அனைத்தும் முதலீடு செய்ய வாங்கப்படும் கடன் ஆகும். ஆனால் தமிழகத்தில் வருவாய் பற்றாக்குறையை சரி செய்வதற்காக அதிகமான வட்டிக்கு கடன் வாங்கியுள்ளனர்.

சமீபத்தில் தமிழக அரசின் நிதி நிலவரம் குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதன்படி 1999, 2000 ரூ.18,989 கோடி கடன், இதன் பின்னர் 2000, 2001ம் ஆண்டு ரூ.28,685 கோடி ஆக உயர்ந்தது. மேலும், 2011, 2012ம் ஆண்டு ரூ.1,03,999 கோடியாக உயர்ந்தது.

அதன் பின்னர் 2015, 16ம் ஆண்டு- ரூ.2,11,483 கோடியாக உயர்ந்தது. படிப்படியாக உயர்ந்து தற்போது 2021ம் ஆண்டில் மொத்த கடன் ரூ.5,70,189 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ரூ.2,63,976 கடன் உள்ளது. வருவாய் பற்றாக்குறை என்பது 3.16 சதவிகிதமாக உள்ளது. இதற்கு முன்பாக தமிழகம் இவ்வளவு பெரிய பற்றாக்குறையை சந்தித்தது கிடையாது. தற்போதைய பட்ஜெட் கடன் பெருகிவரும் அம்சமாக உள்ளது. இதனை எப்படி தமிழக அரசு கட்டி முடிக்கும்.

இது 100 நாள் செயல்பாடுகளில் நீட் தேர்வு மற்றும் நகைக்கடன் தள்ளுபடி, கல்விக்கடன், விவசாயக் கடன் ரத்து, மாதம் இல்லத்தரசிகளுக்கு ரூ.1000, டீசல், பெட்ரோல் விலையில் மானியம் உள்ளிட்டவைகளை நம்பி மக்கள் வாக்களித்து ஏமாற்றமடைந்துள்ளனர்.

இதனை எல்லாம் நிறைவேற்ற முடியாமல் போனதற்கு மோசமான நிதி நிலைமைதான் எனக் கூறும் அரசு, தங்களின் சாதனைகளை கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பத்திரிகைகளில் பக்கம், பக்கமாக விளம்பரங்களை பெரும் பொருட்செயலில் செய்து வருகிறார்கள்.

தமிழகத்தில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தவே அரசிடம் செலவுத் தொகை இல்லை என்று கூறும் அரசு எப்படி பல கோடி ரூபாயில் மற்ற மாநிலங்களில் விளம்பரங்களை செய்து வருகிறது. இப்படி விளம்பரம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source: News 18

Image Courtesy: bjp Tamilnadu

https://tamil.news18.com/news/tamil-nadu/tn-had-no-money-for-people-projects-but-spending-for-ads-in-neighboring-state-annamalai-condemns-ekr-539151.html

Tags:    

Similar News