மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் மாணவர்கள் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி ! மாநில அரசு மறுப்பது ஏன்? அண்ணாமலை கேள்வி !
மதுரை தோப்பூர் பகுதியில் ரூ.1,264 கோடி செலவில் 750 படுக்கைகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். நிலம் கையகப்படுத்தியதைத் தொடர்ந்து மருத்துவமனை கட்டுவதற்காக மத்திய அரசு ஜைக்கா நிதி நிறுவனத்துடன் 2021ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி ஒப்பந்தம் ஏற்படுத்தியது.;
பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரை தோப்பூர் பகுதியில் ரூ.1,264 கோடி செலவில் 750 படுக்கைகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். நிலம் கையகப்படுத்தியதைத் தொடர்ந்து மருத்துவமனை கட்டுவதற்காக மத்திய அரசு ஜைக்கா நிதி நிறுவனத்துடன் 2021ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி ஒப்பந்தம் ஏற்படுத்தியது.
இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் மருத்துவம் படிக்க 150 புதிய மாணவர்களுக்கான சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம் என்றும், கல்லூரிக் கட்டிடம் இல்லாத பட்சத்தில் வேறு இடத்தில் வகுப்புகளை தொடங்கலாம் என்றும், மாணவர்கள் 2 ஆண்டுகள் படித்து முடிக்கும்போது, எய்ம்ஸ் வளாகத்தில் கல்லூரி கட்டி முடிக்கப்படும், அதன்பிறகு மாணவர்களை இடமாற்றம் செய்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு, மாநில அரசுக்கு கடிதம் அனுப்பியது.
மத்திய அரசு தமிழகத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில 150 மாணவர்களுக்கு வாய்ப்பு அளித்தும், அதனை பயன்படுத்திக் கொள்ள மாநில அரசு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வருத்தத்குரியது. தற்காலிக இடங்களில் அமைக்கத் தயக்கம் இருந்தால் ஜிப்மர் மருத்துவமனையில் மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியார் கலைக் கல்லூரிகளில் அல்லது தனியார் மருத்துவ கல்லூரிகளில் புதிய ஜிப்மர் மருத்துவமனை மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கி இருக்கிறது. இதில் எந்த யோசனையும் ஏற்றுக்கொள்ள உகந்ததாக இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு.மா.சுப்ரமணியம் மறுத்துள்ளார்.
எய்ம்ஸ் கட்டப்படும் மற்ற மாநிலங்களில் தற்காலிக இடங்களில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்கள் படிப்பினைத் தொடங்கிவிட்டார்கள். கட்டிடம் முடியும் போது அவர்கள் புதிய கல்லூரியில் தங்கள் படிப்பினைத் தொடர்வார்கள். திருச்சியில் ஐஐஎம் தொடங்கிய போது, கட்டுமானத்திற்கு முன்பே புதிய மாணவர்கள் என்ஐஐடியில் கல்வி பயின்றார்கள்.
ஆகவே மாநில அரசு, மத்திய அரசின் ஒவ்வொரு செயலுக்கும் எதிர் நிலை எடுத்து போராடிக்கொண்டு இருந்தால் மாநிலத்தின் மக்கள் நலன் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து மத்திய அரசுடன் மோதல் போக்கை விடுத்து உடனடியாக 150 ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Source: Tn Bjp Leader Statement
Image Courtesy: Bjp Twiter