ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை மரியாதை நிமித்தமாக சந்தித்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை.!
சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை மற்றும் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை மற்றும் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
தமிழக பாஜக தலைவராக கே.அண்ணாமலை பொறுப்பேற்ற பின்னர் மரியாதை நிமித்தமாக ஒவ்வொரு அரசியல் கட்சியின் தலைவர்களை சந்தித்து வருகின்றார். சமீபத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.
இந்நிலையில், இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அவருடன் பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் மற்றும் மாநில துணை தலைவர்கள் எம்.சக்கரவர்த்தி, துரைசாமி, ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.