முல்லைப் பெரியாறு அணை உரிமையை தவறவிட்ட தி.மு.க.வை கண்டித்து தேனி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை! பா.ஜ.க. அறிவிப்பு!

முல்லைப் பெரியாறு அணையில் தமிழக உரிமையை கேரளாவிற்கு விட்டுக்கொடுத்த திமுக அரசை கண்டித்து தமிழக பாஜக சார்பில் வருகின்ற 8ம் தேதி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விவசாயிகளுடன் சேர்ந்து பாஜக முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-05 10:18 GMT

முல்லைப் பெரியாறு அணையில் தமிழக உரிமையை கேரளாவிற்கு விட்டுக்கொடுத்த திமுக அரசை கண்டித்து தமிழக பாஜக சார்பில் வருகின்ற 8ம் தேதி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விவசாயிகளுடன் சேர்ந்து பாஜக முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரள அமைச்சர் முல்லைப் பெரியாறு அணையை திறந்து விட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக உரிமையை கேரளாவிற்கு திமுக அரசு விட்டுக்கொடுத்து விட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. முல்லைப் பெரியாறு அணை¬யின் தண்ணீர் திறக்கும் உரிமை இதுவரை தமிழகத்திற்கு தான் இருந்தது. மேலும் அணை பராமரிக்கும் உரிமை அணை கையாளும் உரிமையும் தமிழகத்திற்குதான் இருந்தது. 

இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணை¬யில் தமிழக உரிமையை காப்பாற்றாத திமுக அரசை கண்டித்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தை வருகின்ற 8ம் தேதி காலை 10 மணிக்கு பாஜக சார்பில் முற்றுகையிடப்படும் என்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

Source, Image Courtesy: Bjp Twiter

Tags:    

Similar News