4 பா.ஜ.க. எம்.எல்.ஏ.வை உருவாக்கியவர் மத்திய அமைச்சர் முருகன்! - அண்ணாமலை பெருமிதம்!

திருப்பூர் மாவட்டத்தில் மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டு பாஜக மாவட்ட புதிய அலுவலகத்தை திறந்த வைத்தார்.

Update: 2021-11-24 15:08 GMT

திருப்பூர் மாவட்டத்தில் மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டு பாஜக மாவட்ட புதிய அலுவலகத்தை திறந்த வைத்தார். இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி எம்.எல்.ஏ., மற்றும் தேசிய மகளிர் அணித்தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசும்போது, தமிழகத்தில் விவசாயிகளும் பாஜகவில் உயர்ந்த பதவிகளில் உள்ளனர். அதிலும் முன்னாள் பாஜக தலைவரும், தற்போதைய மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள முருகன் செறுப்பு தைக்கும் குடும்பத்தில் பிறந்து உயர்ந்த பதவிக்கு வந்துள்ளார். எனவே பாஜகவில் அனைவரும் சமமானவர்கள் ஆவார்கள்.

தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பாஜக உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இல்லாமல் இருந்தனர். அந்த கவலையை மத்திய இணையமைச்சர் முருகன் போக்கியுள்ளார். தற்போது 4 பாஜக எம்.எல்.ஏ.க்களை உருவாக்கி கொடுத்துள்ளார். மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக பெரும்பான்மையான இடங்களை பெற்று ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Source: Dinamalar

Image Courtesy: Twiter

Tags:    

Similar News