குடும்பதலைவிகளுக்கு 1000 ரூபாய் திட்டம் 'ஸ்வாகா'வா? ஏமாற்றிய பட்ஜெட் !

தி.மு.க ஆட்சியின் முதல் பட்ஜெட்

Update: 2021-08-13 09:15 GMT

குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் தி.மு.க ஆட்சியின் முதல் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என மொத்தம் 505 வாக்குறுதிகளை தி.மு.க மக்கள் மத்தியில் வாரி இறைத்து ஆட்சியில் அமர்ந்து. அதில் குறிப்பாக குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் முக்கியமானதாகும்.

இன்று தமிழக அரசு சார்பில் தி.மு.க ஆட்சியமைந்து முதல் பட்ஜெட் கூட்டம் நடந்தேறியது. அதில் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டதாவது, "தகுதிவாய்ந்த குடும்பங்களை கண்டறிய வரைமுறைகள் உருவாக்கப்படும். இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் தகுதியான குடும்பங்களை கண்டறிந்த பிறகே அமல்படுத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

வாக்குறுதியாக ஒரு திட்டத்தை அறிவிக்கும் பொழுது காத்துவாக்கில் கூறிவிட்டு தற்பொழுது அதனை நடைமுறைப்படுத்த சாத்தியகூறுகளையும், தகுதி வாய்ந்த நபர்களையும் கண்டறிந்த பிறகே அமல்படுத்தப்படும் என நிதியமைச்சர் கூறுவது தி.மு.க'வின் வாக்குறுதியை நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றுவது அப்பட்டமாக தெரிகிறது.

Tags:    

Similar News