தி.மு.க வேட்பாளரை வெற்றி பெற வைக்க அ.தி.மு.க வேட்பாளரை ஏமாற்றிய தேர்தல் அதிகாரிகள் - தி.மு.க'வின் உள்ளாட்சி தேர்தல் தில்லுமுல்லு !

Update: 2021-09-28 00:00 GMT

தி.மு.க வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்ய வைக்க தேர்தல் அதிகாரிகள் அ.தி.மு.க வேட்பாளரிடம் ஏமாற்று முறையில் கையெழுத்து வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றிய குழுவிலுள்ள 8-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க சார்பில் களமிறங்கியிருப்பவர் அம்பிகா. மனு தாக்கலின்போது, மாற்று வேட்பாளராக ரேவதி என்பவரை அம்பிகா முன்னிறுத்தியிருந்தார். இருவரின் மனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், மாற்று வேட்பாளர் ரேவதியின் மனுவைத் திரும்பப் பெறுவதற்காக காட்பாடி பி.டி.ஓ அலுவலகத்துக்கு அவருடன் 'அசல்' வேட்பாளர் அம்பிகாவும் சென்றார். மாற்று வேட்பாளரிடம் விலகல் படிவத்தில் கையெழுத்து வாங்கிய தேர்தல் நடத்தும் அதிகாரிகள், அசல் வேட்பாளரான அம்பிகாவிடமும் கையெழுத்துப் பெற்றதாகக் கூறப்படுகிறது. விலகல் கடிதம் எனத் தெரியாமல் அம்பிகாவும் தேர்தல் அதிகாரிகள் காட்டிய பக்கங்களில் கையெழுத்துப் போட்டதாகக் கூறப்படுகிறது.

அதன்பின், தி.மு.க வேட்பாளர் போட்டியின்றி ஒருமனதாக தேர்வுச் செய்யப்படுவதாகத் தகவல்கள் வெளியானதால் அதிர்ச்சியடைந்த அ.தி.மு.க வேட்பாளர் அம்பிகா, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சென்று ''போட்டியின்றி தி.மு.க வேட்பாளர் எப்படி வெற்றிப்பெற முடியும்? களத்தில் நான் இருக்கிறேன்?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு, ''நீங்கதான்மா வாபஸ் பெறும் படிவத்தில் கையெழுத்துப் போட்டுள்ளீர்கள்'' என்று அந்த படிவத்தை காட்டியிருக்கிறார் தேர்தல் நடத்தும் அதிகாரி. ''மாற்று வேட்பாளருக்கான வாபஸ் படிவம் என்று சொல்லிதானே என்னிடமும் கையெழுத்து வாங்குனீர்கள். இது மோசடி" எனவும், "இது தி.மு.க'வுக்கு ஆதரவான செயல்பாடு'' என்று கண்டித்திருக்கிறார் வேட்பாளர் அம்பிகா. உடனே கோபமடைந்த தேர்தல் அதிகாரிகள் அநியாயமாக அ.தி.மு.க வேட்பாளர் அம்பிகாவை அதட்டி வெளியில் அனுப்பியிருக்கிறார்கள்.

தகவலறிந்ததும், அ.தி.மு.க மாநகர மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையிலான அ.தி.மு.க நிர்வாகிகள் தேர்தல் அதிகாரிகள் அலுவலகத்தில் நேரில் சென்று முறையிட்டுள்ளனர். அப்போது தேர்தல் அதிகாரிகள் தி.மு.க'வினருக்கு சாதகமாகப் பேசி அ.தி.மு.க'வினரை மிரட்டியுள்ளனர். இந்ந சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Source - Junior Vikatan

Tags:    

Similar News